சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்ட தண்ணீர் எங்கே சப்ளை செய்யப்படுகிறது தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து கல் குவாரிகளையும், விவசாய கிணறுகளையும் கூட விட்டு வைக்காமல், அங்கேயிருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது.

தினமும் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னையில் சப்ளை செய்யப்பட்டபோதிலும், அது மக்கலுக்கு போதுமானதாக இல்லை.

எனவேதான், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி நீரை ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

'ஸ்டாலின் நச் பதிலடி'.. டெல்லிக்கு போய் திமுக எம்.பி.க்களால் என்ன செய்ய முடியும் என கேட்டவங்களுக்கு!'ஸ்டாலின் நச் பதிலடி'.. டெல்லிக்கு போய் திமுக எம்.பி.க்களால் என்ன செய்ய முடியும் என கேட்டவங்களுக்கு!

ரயில் தண்ணீர்

ரயில் தண்ணீர்

நேற்று முன்தினம் காலை 50 டேங்கர்களில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் நிரப்பி ரயிலில் அவை சென்னைக்கு வந்தன. நேற்று காலை இரண்டாவது முறையாக ரயிலில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

வட சென்னை

வட சென்னை

கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது. இதன்பிறகு, பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், கொளத்தூர், கொரட்டூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ரயில் மூலம் கொண்டு வந்த தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ரயில் நடைமுறை

ரயில் நடைமுறை

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தினமும் 4 ட்ரிப் வீதம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு 7.5 மில்லியன் லிட்டர் மட்டுமே தண்ணீர் கொண்டு வர முடியும் சூழ்நிலை உள்ளது.

குடிநீர் டேங்கர்கள்

குடிநீர் டேங்கர்கள்

"கடந்த ஆறு மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தேவையான மழை பெய்யவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் டேங்கர்களின் விநியோகத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம். இப்போது சென்னை நகரம் முழுக்க டேங்கர்கள் தினமும் 12,000 ட்ரிப் செல்கின்றன. அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், "என்று நீர்வளத்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

English summary
Water which has brought from Jolarpettai supplied in North Chennai areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X