சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"குட்டை பாவடை".. பட்டப்பகலில் நடுரோட்டில்.. காதல் ஜோடி செய்த காரியம்.. கரெக்ட்டா வந்து நின்ற போலீஸ்

பெட்ரோல் டேங்க் மீது பெண்ணை உட்கார வைத்து பைக் ஓட்டுகிறார் இளைஞர்

Google Oneindia Tamil News

சென்னை: பட்டப்பகலிலேயே நடுரோட்டில் காதல் ஜோடி பைக்கில் செய்த காரியம், வீடியோவாக ஷேர் ஆகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை பகுதியில் உள்ள ஹைவேஸில் ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்... பைக் நடுரோட்டில் சென்று கொண்டிருந்தபோதே திடீரென அந்த இளம்பெண், பின்பக்க சீட்டில் இருந்து, பைக்கின் முன்பு பெட்ரோல் டேங்க் மீது வந்து உட்கார்ந்தார்..

பட்டும் திருந்தாத இலங்கை.. 8 தமிழக மீனவர்களுக்கு சிறை.. நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்கள் அடைப்பு பட்டும் திருந்தாத இலங்கை.. 8 தமிழக மீனவர்களுக்கு சிறை.. நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்கள் அடைப்பு

 பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

அதாவது, அவர் முன்பக்கம் தன்னுடைய காதலனை பார்த்தவாறு உட்கார்ந்து இறுக அணைத்துக் கொண்டார்.. இப்படியே பைக்கில் 2 பேரும் சென்றனர்.. நடுநடுவே சில்மிஷங்களும் ஆரம்பமாகின.. பிறகு திடீரென காதலனை இறுக்கி கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தார் அந்த பெண்.. இதையெல்லாம் பார்த்து, சாலையில் சென்று கொண்டிருந்த சக பயணிகள் ஒரு நிமிஷம் ஆடிப்போய்விட்டனர்.. அந்த வழியாக சென்ற மேலும் பலர், உடனே தங்கள் செல்போனில் இதை வீடியோவாகவும் எடுத்துக் கொண்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்..

 டூ வீலர் சர்க்கஸ்

டூ வீலர் சர்க்கஸ்

இவர்கள் பைக் ஓட்டி செல்லும்போது, எதிரில் வேகமாக ஒரு லாரி வந்தது... பஸ் வந்தது... ஆனால், எதைப்பற்றியும் இவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.. ஆனால், விசாரணையில் பைக்கில் சென்ற இளைஞர் மைசூரு மாவட்டம் எச்டி கோட்டை தாலுக்கா சிவபுரா கிராமத்தை சேர்ந்த எஸ்ஏ சுவாமி என்பது தெரியவந்தது.. கடைசியில் அவரை அள்ளிக்கொண்டு போனார்கள் ‌‌போலீசார்.

சர்க்கஸ்

சர்க்கஸ்

இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அத்துமீறல் என்று சொல்ல முடியாது.. ஆனால், சாகசம் என்ற பெயரில் நடுரோட்டிலேயே சர்க்கஸ் காட்டி உள்ளார் ஒரு இளைஞர்.. இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. ஆனால், வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. காதலியை பைக்கில் உட்கார வைத்துக் கொண்டு காதலன் சென்று கொண்டிருக்கிறார்.. பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. டக்கென பைக்கை நிறுத்திவிட்டு, பின்னாடி உட்கார்ந்திருந்த காதலியை முன்பக்கம் பெட்ரோல் டேங்க் மீது ஏறி உட்கார சொல்கிறார். அந்த பெண் ஸ்கர்ட் அணிந்திருந்ததால், சற்று தடுமாறிதான், டேங்க் மீது உட்காருகிறார்..

 ஸ்கர்ட் + டேங்க்

ஸ்கர்ட் + டேங்க்

பிறகு, தன் பக்கம் திரும்பி உட்காருமாறு சொல்கிறார்.. காதலியும் இளைஞரின் முகத்தை பார்த்தவாறு டேங்க் மீது உட்கார்ந்து கொள்கிறார்.. காதலி முன்பு இப்படி ஒரு சாகசம் செய்து காட்டியபடியே பைக்கை தொடர்ந்து ஓட்டி செல்கிறார்.. இதை சாலையில் செல்லும் அனைவருமே ஆச்சரியத்துடன் பாரக்கிறார்கள்.. இது இளைஞனுக்கு இன்னும் தெம்பை தந்துவிட்டது.. தன்னை ஒரு ஹீரோ போல் காட்டிக் கொண்டு, பைக்கின் வேகத்தை அதிகப்படுத்துகிறார்.. அந்த நேரம் பார்த்து கரெக்ட்டாக வந்துவிட்டார்கள் போலீசார்.. அவர்களை கண்டதும், பைக்கை திருப்பி வேகமெடுக்க நினைக்கிறார் இளைஞர்..

 மாமியார் வீடு

மாமியார் வீடு

ஆனால் காதலர்களை போலீசார் சுற்றி வளைத்துவிட்டனர்.. ஸ்கர்ட் அணிந்திருந்ததால், போலீசாரை பார்த்ததும், அந்த பெண்ணால் உடனடியாக கீழே இறங்க முடியவில்லை.. இறுதியில் இளைஞரின் தோளை பிடித்து இறங்கிவிடுகிறார்.. பிறகு பைக்கை மீண்டும் ஸ்டார்ட் செய்ய இளைஞர் முயல்கிறார்.. ஆனால், வண்டியை ஓரங்கட்ட சொல்கிறார்கள் போலீசார்.. இப்படி அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. இதற்கு பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை.. இளைஞரை மன்னித்து வார்னிங் தந்து விட்டுவிட்டார்களா? அல்லது மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களா? தெரியவில்லை..!

English summary
Jolly bike ride with girl friend and why did police stop the lovers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X