சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன ஒரு தெளிவு.. தல எப்பவுமே தனி ரகம்தான்.. ஜோதிமணி புகழாரம்

அஜித் ஒரு தனி ரகம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி பாராட்டி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajith political entry | 'தெளிவாக இருக்கிறேன்' : அரசியல் பிரவேசத்தை பற்றி அஜித்

    சென்னை: அஜீத்தின் தெளிவு மரியாதைக்குரியது.'தல' எப்போதும் ஒரு தனிரகம்தான்! என்று ஜோதிமணி புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார்.

    அஜித்தை தமிழிசை தாறுமாறாக புகழ போய், கடைசியில் அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டு தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும் நிலைக்கு ஆளாகி விட்டார்.

    எனினும் ஒரே நாளில் அஜித் வெளியிட்ட அறிக்கை பல தரப்பு மக்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

    அரசியல் வேலை

    அரசியல் வேலை

    நிறைய தலைவர்கள் அஜித்தின் வெளிப்படையான அந்த அறிக்கைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதில் ஜோதிமணியின் கருத்துதான் முதலில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

    கோரிக்கை

    கோரிக்கை

    ஏனெனில் அஜித் ரசிகர்களை தன் கட்சியில் இணைத்து, மோடி புகழை சேர்க்க வேண்டும் என்று ஒரு அரசியல் வேலையையும் கோரிக்கையாக விடுத்தது தமிழக பாஜக தலைவர் தமிழிசைதான்.

    மறைமுக பதில்

    மறைமுக பதில்

    பிரதான எதிர்க்கட்சி என்பதால் தமிழிசை என்றாலே காரசார விவாதத்துக்கு தயாராகிவிடுபவர் ஜோதிமணிதான். அந்த வகையில் இப்போது அஜித்துக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் போட்டு, தமிழிசைக்கு மறைமுக பதிலை தெரிவித்துள்ளார்.

    ஒரு தனி ரகம்

    ஒரு தனி ரகம்

    அதில், "ஒரு ஜனநாயக நாட்டில் நடிகர்கள் உட்பட யாருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமையுண்டு. நடிப்பைத்தாண்டி தனது சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்கு அனுக்கமாக இருப்பதற்காக மட்டுமே பல வருடங்களாக 'அரசியலை' பயன்படுத்துபவர் மத்தியில் அஜீத்தின்தெளிவு மரியாதைக்குரியது.'தல' எப்போதும் ஒரு தனிரகம்! என்று புகழ்ந்து தள்ளி உள்ளார்.

    English summary
    Congress Party Jothimanii tweet about Ajith's Statement. She has praised Ajith as a "Separate Type" person.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X