சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் உண்மையான உணர்வு.. காங். செய்தது தப்பு.. அடித்து சொன்ன ஜோதிமணி!

காங்கிரஸ் கட்சியை விமர்சித்து ஜோதிமணி ட்வீட் போட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் ஆதரவு அளித்தது தவறு- ஜோதிமணி- வீடியோ

    சென்னை: என்னே ஒரு ஆச்சரியம்!! வழக்கத்துக்கு மாறாக சொந்தக் கட்சியையே விமர்சித்து இருக்கிறார் ஜோதிமணி!

    பொதுவாக, பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகைதான்... காலா காலத்துக்கும் ஏழரைதான். அதனால்தானோ என்னவோ, அகில இந்திய அளவிலிருந்து மாநில அளவு வரை இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒருத்தருக்கொருத்தர் காலை வாரி விட்டு, கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.

    எப்போதெல்லாம் சாக்கு கிடைக்குமோ அங்கெல்லாம் இரு தரப்புமே வந்து முடிந்தவரை இடித்து பேசிவிட்டு போகும் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

     பகிரங்க விமர்சனம்

    பகிரங்க விமர்சனம்

    ஆனால் எந்த நாளும் இல்லாத வகையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவு துரதிர்ஷ்டவசமானது என்று தன் எதிர்ப்பினை இந்த ட்வீட்டில் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

    மசோதா நிறைவேறியது

    மசோதா நிறைவேறியது

    "அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டதிருத்த மசோதா கடந்த 8-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது சம்பந்தமாக அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து. ஆனால் காங்கிரஸ் இதற்கு பலமான எதிர்ப்பு தெரிவிக்காததுடன், மசோதாவுக்கு ஆதரவு தரும் போக்கிலேயே இருந்தது. இதையடுத்து மறுநாளே இந்த மசோதா நிறைவேற்றவும்பட்டது.

    துரதிர்ஷ்டவசமானது

    இது சம்பந்தமாகத்தான் ஜோதிமணி கருத்தை பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் "உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டு கால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல் சாசனத்திற்கு முரணானது.

    ஏற்புடையது அல்ல

    உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடுக் கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது. வருடத்திற்கு 8 லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது?

    ஒப்புதலை பெற முடியுமா?

    உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கெனவே பொருளாதார அடிப்படியிலான 10% இட ஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறமுடியும்?" என ஜோதிமணி கேள்வி கேள்வி எழுப்பி உள்ளார்.

     3 ட்வீட்கள்

    3 ட்வீட்கள்

    அதிமுக, திமுக கேட்ட அதே கேள்விகளைதான் ஜோதிமணியும் இன்று கேட்டிருக்கிறார். ஒரே கட்சியில் இருந்து கொண்டு ஜோதிமணி அடுத்தடுத்து போட்டு தாக்கியுள்ள இந்த 3 ட்வீட்கள்தான் காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    English summary
    Jothimani criticise congress stand in 10% Reservation for upper castes issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X