சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓட்டு போடாட்டி போங்கனு சொன்னதை செய்த மக்கள்.. தம்பிதுரையை ஓவர்டேக் செய்யும் தில் தில் ஜோதிமணி

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha election results 2019: அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை- வீடியோ

    சென்னை: கரூர் மக்களவை தொகுதியில் மக்களவை துணை சபாநாயகரும் அத்தொகுதி எம்பியுமான தம்பிதுரையை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முந்தி வருவதை பார்த்து அக்கட்சியினர் பூரிப்பில் உள்ளனர்.

    நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

    முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஜோதிமணி தம்பிதுரையை காட்டிலும் அதிக வாக்குகளை பெற்று லீடிங்கில் உள்ளார். இவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.

    முன்னிலை

    முன்னிலை

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜோதிமணி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கடும் உழைப்பை கொடுத்துள்ளார். அதுதான் இந்த முன்னிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

    மக்கள்

    மக்கள்

    மேலும் தம்பிதுரை அங்குள்ள தொகுதி மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அவர் காவிரி விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அவர் தேர்தல் கூட்டணிக்கு பிறகு பாஜகவை எதிர்ப்பதையே கைவிட்டார். இதனால் மக்கள் அவர் மீது கடுங்கோபத்தில் உள்ளனர். மேலு்ம ஓட்டு போட்டால் போடுங்க, இல்லாட்டி போங்க என அலட்சியமாக கூறினார்.

    ஆட்சியரை கேள்வி எழுப்பிய ஜோதிமணி

    ஆட்சியரை கேள்வி எழுப்பிய ஜோதிமணி

    தேர்தல் பிரசாரத்தின்போது ஜோதிமணிக்கு போன் செய்த அந்த மாவட்ட ஆட்சியர், காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தன் வீட்டுக்கு புகார் மனு கொடுக்க வந்து தன்னை மிரட்டியதாக குறிப்பிட்டார். இதை பொறுமையுடன் கேட்ட ஜோதிமணி, உண்மை சம்பவத்தை விளக்கிக் கூறினார்.

    நியாயத்தை புரிய வைத்த ஜோதிமணி

    நியாயத்தை புரிய வைத்த ஜோதிமணி

    அப்போது என்னை மிரட்டுவதாக கூறி கரூர் மக்களவை தொகுதி தேர்தலை நான் நிறுத்த முடியும் என ஜோதிமணியை ஆட்சியர் அச்சுறுத்தினார். ஆனால் ஜோதிமணியோ ஒரு தேர்தலை நிறுத்துவதை அவ்வளவு எளிதாக கூறுகிறீர்களே. இத்தனை பேரின் உழைப்பு என்னவாவது என கேள்வி எழுப்பினார். மேலும் அமைதியான போராட்டங்களில் நிறைய சாதனை புரிந்தவர் ஜோதிமணி. இவரது வெற்றியை கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.

    English summary
    Congress candidate Jothimani overtakes Thambidurai in Karur LS constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X