சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்கா... நீங்களாவது கொஞ்சம் முயற்சி பன்னுங்க.. கரூரை கலக்கும் ஜோதிமணி

தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஜோதிமணி திட்டமிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்

    சென்னை: முக ஸ்டாலின் என்னைக்கு ஒரு ஆர்டரை எம்பிக்களுக்கு போட்டாரோ, அப்பவே பட்டைய கிளப்ப ஆரம்பித்து விட்டார் ஜோதிமணி!

    சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர், ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், "திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் தங்கள் தொகுதி மக்கள் பிரச்னைகள் குறித்த அறிக்கையை என்னிடம் வழங்க வேண்டும். இது வேண்டுகோள் இல்லை; கட்டளை!" என்று கூறியிருந்தார்.

    அது மட்டுமில்லை, "நமக்கு வாக்களிக்க தவறியவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க தவறியவர்கள், வாக்களிக்க தவறிவிட்டோமே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் பணியாற்ற வேண்டும் அதனால் ஒவ்வொரு மாதமும் மக்கள் பிரச்சனைகள் குறித்த ரிப்போர்ட்டை எனக்கு தர வேண்டும்" என்று கேட்டிருந்தார்.

    கட்டாந்தரையில்.. போர்வை கூட போர்த்திக்காமல்.. தூங்கும் குமாரசாமி.. கட்டாந்தரையில்.. போர்வை கூட போர்த்திக்காமல்.. தூங்கும் குமாரசாமி.. "தல"க்கு தில்லைப் பாத்தீங்களா!

    ஆர்டர்.. ஆர்டர்

    ஆர்டர்.. ஆர்டர்

    இப்படி "ஆர்டர்" போட்ட வார்த்தைகள் ஸ்டாலினிடம் இருந்து வந்ததே இல்லை. ஆனால் மக்கள் பிரச்சனைகளை திமுக அதிகமாகவே கையில் எடுக்க தொடங்கி உள்ளது. அதன்படியேதான், தண்ணீர் பிரச்சனையும்! "மக்கள் குடிநீருக்காக அவதிப்படுவதால், முடிந்தவரை தண்ணீர் விநியோகம் செய்யுங்கள்" என்று சொல்லி, அதன்படியே தற்போது நடந்தும் வருகிறது.

    எம்பியாக பதவியேற்பு

    எம்பியாக பதவியேற்பு

    எம்பியாக பதவியேற்று வந்த ஜோதிமணியோ, ஸ்டாலினின் ஆர்டரை செயல்படுத்த கிளம்பிவிட்டார். "ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வரப்போகிறேன், உங்கள் மனுக்களை தயாரா வைச்சுக்குங்க.. என்ற ரீதியில் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    ட்வீட்

    அதில், "ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக மனுக்கள் பெறத் துவங்கியுள்ளோம். குடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்க்கவேண்டியுள்ளது. அரசு இயந்திரம் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று பதிவிட்டு, எந்தெந்த தேதிகளில் எந்தெந்த பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளார் என்ற பட்டியலையும் போட்டுள்ளார்.

    வாழ்த்து

    இந்த பதிவிற்கு கீழே, "வாழ்த்துக்கள் அக்கா...ஆளும் கட்சியை நம்பாம நீங்களாவது கொஞ்சம் முயற்ச்சி பன்னுங்க அக்கா..." என்று உரிமையுடனும், பாசத்துடனும் ஜோதிமணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    English summary
    Karur MP Jothimani is going to go through every assembly block for Water Scarcity Issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X