சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒரு போதும் செல்லுபடியாகாது.. எம்பியான பிறகு ஜோதிமணியின் "முதல்" டுவீட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    TN MP's: காத்திருக்கும் புதிய எம்பிக்கள்.. நம்பிக்கையில் தமிழகம்!- வீடியோ

    சென்னை: உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒரு போதும் செல்லுபடியாகாது என எம்பி ஜோதிமணி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    Jothimani tweet about Hindi imposition

    இந்த குழுவின் பரிந்துரைபடி 8-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படும். இதற்கு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் "இந்தி" என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இவர் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கரூர் எம்பியான காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கரூர் எம்பி ஜோதிமணி கூறுகையில் தமிழக மக்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக மக்களாகிய நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். எந்த ஒரு மொழியையும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்க நினைத்தால் தமிழகம் அதை போர்க் குணத்தோடு எதிர்க்கும். உங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒருபோதும் செல்லுபடியாகாது என தெரிவித்துள்ளார்.

    கரூர் எம்பியான பிறகு சமூக பிரச்சினைக்காக போடப்பட்டுள்ள ஜோதிமணியின் முதல் டுவீட் இது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பொதுவான விஷயங்களையும் வாழ்த்து செய்திகளையும் வெளியிட்டு வந்தார் ஜோதிமணி.

    English summary
    Karur MP Jothimani tweet about Hindi imposition in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X