சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாமனார், மாமியார், கணவர்.. குடும்பமே பதவி சுகத்தை அனுபவிச்சிட்டு.. நிர்மலா மீது ஜோதிமணி பாய்ச்சல்

நிர்மலா சீதாராமனுக்கு ஜோதிமணி ட்விட்டரில் பதில் தந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முழு நேர அரசியலில் பிரியங்கா காந்தி... காங்கிரஸ் அதிரடி- வீடியோ

    சென்னை: "மேடம்... மாமனார், மாமியார், கணவர்னு குடும்பமே பல கட்சியில் பதவியை அனுபவிச்சுட்டு.. கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியக்கூடாது" என்று நிர்மலா சீதாராமனுக்கு ஜோதிமணி பதிலடி தந்துள்ளார்

    உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதி பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மனதார பாராட்டும், சில தலைவர்கள் வாழ்த்து சொல்வது போல் இழித்தும், பழித்தும் வருகிறார்கள்.

    சில தலைவர்கள் பகிரங்க கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரியங்காவின் அரசியல் வருகை பற்றி கருத்து சொன்னார்.

    குடும்ப அரசியல்

    குடும்ப அரசியல்

    அப்போது ''காங்கிரஸ் கட்சியில் திறமை மிக்கவர்கள் நிறைய பேர் இருந்தும் அவர்களுக்கு பொறுப்புகள் தராமல், வழங்காமல் பிரியங்கா காந்திக்கு தந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்திருந்தார். குடும்ப அரசியல் என்ற நிர்மலா சீதாராமனின் விமர்சனத்துக்கு காங்கிரசின் ஜோதிமணி பதிலடி தந்துள்ளார்.

    மாமனார், மாமியார்

    மாமனார், மாமியார்

    இது சம்பந்தமான தனது ட்வீட்டில், "பஞ்சாயத்து, வட்டம், மாவட்டம்னு பிஜேபியில் கீழ்மட்டத்திலிருந்து கடுமையா உழைச்சு மந்திரியான மாதிரி பேசக்கூடாது. மாமனார், மாமியார், கணவர்னு குடும்பமே பல கட்சியில் பதவியை அனுபவித்தவர்கள். அந்தப் பின்னணியில் திடீர்னு உயர்பதவிக்கு வந்துவிட்டு கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிய வேண்டாம் மேடம்!" என்று ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

    வைரல் ட்வீட்

    இங்கிருக்கும் தமிழிசையையே ட்வீட் போட்டு கலங்கடிக்கும் ஜோதிமணி, நிர்மலா சீதாராமனை விட்டு விடுவாரா என்ன? தைரியமாகவும், துணிச்சலாகவும், உண்மையை சொல்லி பதிவிட்ட ஜோதிமணியின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

    பரகலா சேஷவரதாரம்

    பரகலா சேஷவரதாரம்

    ஆனால் உண்மையிலேயே நிர்மலா சீதாராமனின் குடும்பம் அரசியல் பின்னணியை உடையதுதான். இவரது கணவர் பரகலா பிரபாகர், ஆந்திர அரசின் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றியவர். மாமனார் பரகலா சேஷவரதாரம் ஆந்திர காங்கிரசில் பலமுறை அமைச்சராக பதவி வகித்தவர். மாமியார் காளிகாம்பாவும் ஆந்திர மாநில எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். இத்தனை பின்னணியை நாடே பார்க்கும்படி வைத்துக் கொண்டு, எதற்காக பிரியங்காவை மட்டும் குடும்ப அரசியல் என்று சொல்கிறார் என்றுதான் நமக்கு தெரியவில்லை.

    English summary
    Congress Jothimani replies to Nirmala Seetharaman's criticism about Priyanka Gandhi's entry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X