சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நமக்கு ஒரே ஆறுதல் இதுதான்.. ராகுலை தூக்கி வைத்தும்.. மோடியை தாக்கியும் ட்வீட் போட்ட ஜோதிமணி

ராகுல் காந்தியை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு ஜோதிமணி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "இந்த தேசம் மக்களின் தலைவரால் ஆளப்படும் நாள் அருகில் இருக்கிறது" என்று ராகுல் காந்தியை பாராட்டி காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே ராகுல் காந்தியின் அரசியல் வியூகங்கள், அதிரடிகளை பல்வேறு தலைவர்கள் ஆச்சரியத்துடன் வரவேற்று வருகின்றனர்.

பணம் செலுத்தும் திட்டம்

பணம் செலுத்தும் திட்டம்

இந்நிலையில், தற்போது ராகுல் காந்தி ஒரு புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. செலவுக்கு பணம் இல்லை என்று ஒருவர் கூட நாட்டில் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் நாட்டு மக்களின் வங்கி கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வரப்போகிறார் என்றும், பிரதமர் ஆனதும் அமல்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தலைவர்கள்

தலைவர்கள்

ராகுலின் இந்த புரட்சிகர திட்டத்தினை வரவேற்பதாக காங்கிரஸ் தலைவர்கள், உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், காங்கிரசின் ஜோதிமணியும் இந்த திட்டத்தினை வரவேற்றுள்ளார். இது சம்பந்தமாக ராகுல்காந்தியை பாராட்டி உள்ளதுடன், பிரதமர் மோடியுடனும் ஒப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார்.

அருகில் இருக்கிறது

அதில், "ராகுல்: அமையவிருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு இந்தியருக்கும் குறைந்தபட்ச வருமானம் உறுதிப்படுத்தப்படும்.
மோடி: சர்ச்சைக்குரிய அயோத்யாவை ( ராமர் கோவில்)சுற்றியுள்ள இடங்கள் கையகப்படுத்தப்படும்.
இந்த தேசம் மக்களின் தலைவரால் ஆளப்படும் நாள் அருகில் இருக்கிறது என்பதுதான் ஒரே ஆறுதல்" என்று பதிவிட்டுள்ளார்.

15 லட்சம் ரூபாய்

15 லட்சம் ரூபாய்

போன தேர்தலில் அனைவருக்கும் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்ன மோடி, அதனை இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும், நாட்டு மக்களைவிட, இந்துத்துவா கொள்கையில்தான் அதிக கவனத்தை மோடி செலுத்துகிறார் என்கிற விதத்திலும் மோடியுடன் ராகுலை ஒப்பிட்டு இந்த ட்வீட்டினை ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

எதிர்மறை விமர்சனங்கள்

எதிர்மறை விமர்சனங்கள்

இதற்கு முன்பும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஏன் வறுமையை ஒழிக்கவில்லை என்றும், இலவசங்களை கொடுத்தே மக்களை எல்லா கட்சிக்கார்களும் ஏமாற்றுகிறார்கள் என்றும் ஜோதிமணியின் ட்வீட்டுக்கு எதிர்மறை விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன.

English summary
Congress Jothimani Comparing Modi With Rahul Gandhi's new Scheme of Eradication of Poverty
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X