சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபாஷ் சரியான போட்டி.. "வீ டு"வின் "ஆண்கள் வெர்ஷன்" இப்போது வந்தாச்சு!

Google Oneindia Tamil News

Recommended Video

    me too-க்கு போட்டியாக ஆண்களுக்கு வந்துவிட்டது we too- வீடியோ

    சென்னை: ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீ டூ என்ற இயக்கத்தை தொடங்கியது போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் வீ டூ மென் என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

    மீ டூ என்ற இயக்கம் குறித்து சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்த ஹேஷ்டேக்கை வைத்து பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தி வருகின்றனர்.

    இதன் மூலம் பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீ டூ ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     வீ டூ மென்

    வீ டூ மென்

    சின்மயியை தொடர்ந்து பல நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இது இவ்வாறிருக்க பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் வீ டூ மென் என்ற இயக்கத்தை பத்திரிகையாளரும் இயக்குநருமான வாராகி தொடங்கியுள்ளார்.

    தொழிலதிபர்கள்

    தொழிலதிபர்கள்

    இதுகுறித்து திரைப்பட இயக்குநர் வாராகி கூறுகையில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம். இதில், நடிகர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சேர்ந்துள்ளனர்.

    செயல்கள்

    செயல்கள்

    ஆண்கள் மீது விருப்பம் ஏற்பட்டு அவர்களுடன் பழகும் பெண்கள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் அவர்கள் மீது பாலியல் புகார் கொடுக்கின்றனர். சிலர் பணத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளோம்

    உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளோம்

    இதுபோன்ற புகார்களை தொடர்ந்து அனுமதித்தோமேயானால் ஆண்களுக்கு என்று பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். இதுபோன்ற புகார்களை ஏற்பது தொடர்பாக உரிய வழிமுறைகளை பின்பற்ற உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றார்.

    English summary
    Journalit Varagi starts We Too Men campaign for those who are affected by ladies. Its like Me Too Movement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X