சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்குமார், பாலகிருஷ்ண ரெட்டி, வைகோ.. 3 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சாந்தி!

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறை தண்டனை நிறுத்தி வைப்பு- எம்.பி. பதவிக்கு வைகோ போட்டியிடுவதில் சிக்கல் இல்லை?- வீடியோ

    சென்னை: பெரம்பூர் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், ஓசூர் எம்எல்ஏவும் அதிமுக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு தண்டனை வழங்கியவர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சாந்தியாவார்.

    சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள சாந்தி இது வரை 3 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் முதல் வழக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு தண்டனை.

    கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் 15 வயது மகள் மகள் சத்யா. பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இந்திய இறையாண்மைக்கு எதிராக அப்படி என்ன பேசினார் வைகோ.? தேசதுரோக வழக்கு கடந்து வந்த பாதை இந்திய இறையாண்மைக்கு எதிராக அப்படி என்ன பேசினார் வைகோ.? தேசதுரோக வழக்கு கடந்து வந்த பாதை

    10 ஆண்டுகள் சிறை

    10 ஆண்டுகள் சிறை

    விசாரணையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது நீதிபதியாக இருந்தவர் சாந்தி.

    பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை

    பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை

    அடுத்தப்படியாக அதிமுக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி வழக்காகும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி 1998-ம் ஆண்டு பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பாஜகவில் நிர்வாகியாக இருந்த பாலகிருஷ்ணரெட்டி மீது அரசு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக அவர் உள்ளிட்ட 108 பேர் மீது போலீசார் 1998-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

    நீதிபதி சாந்தி

    நீதிபதி சாந்தி

    அவர் மீதான இந்த வழக்கை சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு பால கிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார் ரெட்டி. இந்த வழக்கிலும் நீதிபதி சாந்தியே தீர்ப்பளித்தார்.

    தேச துரோக வழக்கு

    தேச துரோக வழக்கு

    மூன்றாவது வழக்கு வைகோ மீதான வழக்காகும். கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர்.

    குற்றவாளி என தீர்ப்பு

    குற்றவாளி என தீர்ப்பு

    இந்த வழக்கில் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை காலம் ஓராண்டு விதிக்கப்பட்டுள்ளது. ரூ 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பையும் நீதிபதி சாந்தியே வழங்கினார்.

    3 முக்கிய வழக்குகள்

    3 முக்கிய வழக்குகள்

    எனவே சிறுமி பாலியல் வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கும் பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காக அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டிக்கும் தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தியே தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai Special Court's Judge Santhi convicted DMK Rajkumar, ADMK Balakrishna Reddy and MDMK Vaiko in 3 important cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X