எடப்பாடியெல்லாம் எம்ஜிஆராக முடியாது! ஓபிஎஸ் தான் கட்சிக்கு தலைமை! ஜுனியர் எம்ஜிஆர் சொல்லிட்டாரே!
சென்னை : எடப்பாடியார் அடுத்த எம்ஜிஆர் இல்லை எனவும், ஒற்றை தலைமை தவிர்க்க வேண்டும், அப்படியே வந்தாலும் ஓபிஎஸ் தான் கட்சிக்கு தலைமை என ஜுனியர் எம்ஜிஆர் என அழைக்கப்படும் எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அடுத்தடுத்து பல திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என போட்டி காரணமாக கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கட்சியில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமியும், தனக்குதான் தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வமும் கூறி வருகின்றனர்.
என்னாது எடப்பாடியார், சி.வி.சண்முகம் அதிமுகவிலிருந்து நீக்கமா?.. ஓபிஎஸ் தரப்பு போஸ்டரால் பரபரப்பு!

எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரன்
இந்நிலையில் ஓபிஎஸ் தான் கட்சிக்கு தலைமை என ஜுனியர் எம்ஜிஆர் என அழைக்கப்படும் அவரது பேரன் ராமச்சந்திரன் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் காக்கப்பட்டது. அவர் இருக்கும் காலத்திலேயே ஓபிஎஸ் ஐ நம்பி கட்சிப் பொறுப்பை கொடுத்தார். எம்ஜிஆர் தொண்டர்களால் தேர்வு செய்யபடுபவர்களையே அதிமுக கட்சி ஏற்றுக்கொள்ளும். தற்போது ஒற்றைத் தலைமை ஏன் என தெரியவில்லை. சட்டப்படி இருவரும் கையெழுத்து போட்டால் தான் கட்சியில் எந்த முடிவையும் எடுக்க முடியும்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை
அப்படிப் பார்த்தால் சீனியர் ஓபிஎஸ் அவரை தான் தலைமையாய் ஏற்க வேண்டும் என்று ஈபிஎஸ் தான் விட்டுக் கொடுக்கணும். எனினும் இரட்டை தலைமை இருந்தால் கட்சி இன்னும் கட்டிக் காக்கப்படும். இப்போ கட்சியும் , சின்னமும் ஓபிஎஸ் இடம் தான் உள்ளது. இரண்டு பேரும் சேர்ந்து தலைமை வகித்தால் கட்சி வேற லெவல் போகும்.

மிகப்பெரிய சக்தி
மிகப் பெரிய சக்தி வாய்ந்த கட்சியாக அசைக்க முடியாதபடி வளரும். எனவே ஒற்றை தலைமை தவிர்க்க வேண்டும். இபிஎஸ் தலைமையில் தொடர்ந்து தோல்வி ஏன் ? ஓபிஎஸ் விட்டு கொடுத்ததால் தான் இபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவரானார். அடுத்த பொதுக்குழு நீதிமன்ற உத்தரவுபடி நடக்காது. தொண்டர்கள்தான் அதிமுகவில் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஓபிஸ்எஸை நீக்க முடியாது
ஓபிஎஸ்ஐ கட்சியை விட்டு நீக்க முடியாது. ஓபிஎஸ் தான் இபிஎஸ்ஐ நீக்கமுடியும். மேலும் பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஐ அவமானப்படுத்தியது அராஜக செயல். மேடையில் வளர்மதி எம்ஜிஆர் பாட்டை பொதுக்குழுவில் தப்பாக பாடுகிறார். என்றும் எடப்பாடியார் அடுத்த எம்ஜிஆர் இல்லை. எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது அவர் கடவுள் போன்றவர் ஒரே MGR தான் என பேட்டியளித்தார்.