சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சிக்கு ஆபத்து?.. சரிவை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. வார்னிங் நோட் அனுப்பும் வல்லுநர்கள்!

தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பங்குச்சந்தை வர்த்தகம் இறங்கு முகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆட்சி மாற்றம் ஏற்படுமா ? பங்குசந்தை சரிவு கூறுவது என்ன ?

    சென்னை: தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பங்குச்சந்தை வர்த்தகம் இறங்கு முகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாம் பாஜக கட்சிக்கும், அதன் கூட்டணிக்கும் ஆதரவாக வந்தது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்கள் வரை சராசரியாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 115 இடங்களை வெல்லும்.

    மற்ற மாநில கட்சிகள் 147 இடங்களை வெற்றிபெறும் இடங்களை வெல்லும் என்கிறார்கள். இந்த நிலையில்தான் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

    கணிப்புகள் எப்படி

    கணிப்புகள் எப்படி

    இந்த கணிப்புகள் காரணமாக கடந்த செவ்வாய் அன்று பங்கு சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 962 புள்ளிகள் உயர்ந்து 38,892 புள்ளிகளாக வர்க்கமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 286 புள்ளிகள் உயர்ந்து 11,694 புள்ளிகளாக வர்க்கமானது.

    என்ன முதலீடுகள்

    என்ன முதலீடுகள்

    இதனால் முதலீடுகள் அதிகரித்தது. ஆனால் இந்த நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நேற்றே பங்கு சந்தையில் பெரிய அடி விழுந்தது. நேற்று திடீர் என்று பங்குச்சந்தை பெரிய அளவில் சரிந்தது. நேற்று சென்செக்ஸ் 480 புள்ளிகள் சரிந்தது. அதேபோல் அதே போன்று நிப்டியும் 154 புள்ளிகள் சரிவடைந்தது.

    எப்படி குறைந்தது

    எப்படி குறைந்தது

    இந்த பிரச்சனை இன்றும் தொடர்ந்தது. இன்று காலை சென்செக்ஸ் 382 புள்ளிகள் சரிந்தது. அதேபோல் அதே போன்று நிப்டியும் 119 புள்ளிகள் சரிவடைந்தது. தற்போது கொஞ்சம் சீராக சென்செக்ஸ் இருக்கிறது. இன்று சென்செக்ஸ் முடியும் முன் இன்னும் கொஞ்சம் புள்ளிகளை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    பொதுவாக தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராக வந்தால் புள்ளிகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் மெஜாரிட்டி இருக்கும் ஒரு கட்சி ஆட்சியை இழந்தால் அதிக அளவில் மார்க்கெட் புள்ளிகள் குறையும். இதனால், பாஜகவிற்கு எதிரான சிக்னலாக இந்த மார்க்கெட் சரிவு பார்க்கப்படுகிறது.

    என்ன வார்னிங்

    என்ன வார்னிங்

    இந்த நிலையில்தான் மார்க்கெட்டிங் வல்லுநர்கள் அடுத்த சில நாட்களுக்கு மிகவும் கவனமாக ஷேர்களை வாங்க விற்க செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் மாறி வரலாம். இதனால் மார்க்கெட் பெரிதாக பாதிக்கும், கவனமாக இருங்கள் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    English summary
    Just before the election results: Share Markets are seeing a huge downfall in the last two days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X