சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம்; ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயமா... திருமாவளவன் ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: சஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம் ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. நடிகர் சஞ்சய்தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் இருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை ஆனார்.

நாங்க அந்த சிலையை உடைக்கவில்லை.. புதுசா கட்டிக்கொடுக்கிறோம்.. கொல்கத்தாவில் மோடி புது டிவிஸ்ட்!நாங்க அந்த சிலையை உடைக்கவில்லை.. புதுசா கட்டிக்கொடுக்கிறோம்.. கொல்கத்தாவில் மோடி புது டிவிஸ்ட்!

நடவடிக்கை எடுக்கவில்லை

நடவடிக்கை எடுக்கவில்லை

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தகவல் அறியும் சட்டம்

தகவல் அறியும் சட்டம்

இந்தநிலையில் சஞ்சய்தத் விடுவிக்கப்பட்ட தகவல்களை பற்றி பேரறிவாளன் தரப்பில் எரவாடா சிறை அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு சிறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. அதே நேரம், மத்திய அரசு அனுமதி இல்லாமல் தண்டனை காலத்துக்கு முன்பே சஞ்சய்தத் விடுதலையானார் என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

திருமாவளவன் கேள்வி

திருமாவளவன் கேள்வி

இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம் ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

கோரிக்கை

கோரிக்கை

மேலும், தமிழக சிறை முறை கையேட்டின் படி ஏழு பேரையும் விடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசை நம்பினால் ஏழு பேர் விடுதலையாக வாய்ப்பில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

English summary
Thirumavalavan Voices That There is No justification for seven Tamils
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X