சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எழுத்தாளனுக்குரிய உரிமையை வாங்கிக் கொடுத்தது மகிழ்ச்சி.. கே.பாக்யராஜ்

Google Oneindia Tamil News

Recommended Video

    திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ்- வீடியோ

    சென்னை: திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் கூட ஒரு எழுத்தாளனுக்குரிய உரிமையை வாங்கிக் கொடுக்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.

    தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார் கே. பாக்யராஜ். சர்கார் படக் கதை விவகாரம் தொடர்பாக எழுந்த அடுத்தடுத்த நிகழ்வுகளே அவர் பதவி விலக முக்கியக் காரணம்.

    K Bhagyaraj clarifies on his resignation

    [சர்கார் விவகாரத்திற்கு பிறகு அசவுகரியம், ஒழுங்கீனத்திற்கு ஆளானேன்.. பாக்யராஜ் பரபரப்பு அறிக்கை ]

    தனது ராஜினா குறித்து நீண்ட கடிதம் ஒன்றை அவர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளார். அதை விளக்கி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கே.பாக்யராஜ். அப்போது தனது கடிதத்தை முழுமையாக வாசித்தார். பின்னர் அவர் கூறுகையில், நான் பதவியிலிருந்து விலகினாலும் கூட ஒரு எழுத்தாளனுக்குரிய அங்கீகாரத்தையும், உரிமையையும் வாங்கிக் கொடுக்க முடிந்தது. அதற்காக நான் மகிழச்சி அடைகிறேன் என்று கூறினார்.

    தனது ராஜினாமா குறித்து அடுத்து வரும் ரியாக்ஷனைப் பொறுத்து தான் பதிலளிக்கப் போவதாகவும், இப்போதைக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை என்றும் கூறி பேட்டியை முடித்துக் கொண்டார் கே. பாக்யராஜ்.

    தமிழ்த் திரையுலகின் பிதாமகர்களில் ஒருவர் கே. பாக்யராஜ். அவருக்கு இந்த அளவுக்கு நெருக்கடி வந்து பதவியை விட்டு விரட்டியடிக்கும் அளவுக்கு அது போயிருப்பது திரையுலகை அதிர வைத்துள்ளது.

    English summary
    Director and Film writers association president K Bhagyaraj has resigned his post and clarified for the decision to the Press.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X