சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவுடன் மநீம கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை- கே.என். நேரு

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக், மமக, தவாக உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை திமுக விரைவில் அறிவிக்க இருக்கிறது.

K.N.Nehru denies Kamal Haasans MNM to join DMK Alliance

இதனிடையே திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணையலாம் என்கிற பேச்சுகள் வலம் வந்தன. திமுக அணியில் ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சலசலப்புகள் எழுந்துள்ளன.

அதேநேரத்தில் மநீம தலைமையில் 3-வது அணி அமையலாம் என்கிற தகவலும் பரவி வருகிறது. இந்த நிலையில் திமுக மூத்த தலைவர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அணியில் மநீம இணைய வாய்ப்பு இல்லை.

திமுக கூட்டணியில் எந்த கட்சியையும் நாங்களாக வெளியேற்ற மாட்டோம். பாரிவேந்தர் தனித்து போட்டியிடுவது என்பது அவரது விருப்பம் என்றார். இதனால் திமுக அணியில் மக்கள் நீதி மய்யம் இணையாது என்பது உறுதியாகி உள்ளது.

English summary
Senior DMK leader K.N.Nehru has denied the reports on Kamal Haasan's MNM may join DMK Alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X