சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத அரசு, தமிழக அரசு- கே எஸ் அழகிரி கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத அரசாக தமிழக அரசு உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் பிரச்சினையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு பகல் பாராமல் தண்ணீர் தேடி அலைகின்றனர்.

இந்த நிலையில் டேங்கர் லாரிகளும் வாரத்துக்கு ஒரு முறை, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்வதாகவும் அவ்வாறு செய்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான குடங்களே கிடைக்கின்றன. இதை வைத்து கொண்டு எப்படி ஒரு வாரம், 15 நாட்கள் என வாழ்க்கையை ஓட்ட முடியும் என மக்கள் கொந்தளிக்கின்றனர்.

தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு.. கொடி கட்டிப் பறந்த தமிழ் ! தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு.. கொடி கட்டிப் பறந்த தமிழ் !

பிரச்சினை இல்லை

பிரச்சினை இல்லை

ஆனால் தமிழக அரசோ தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்கிறது. நேற்றைய தினம் ரிப்பன் மாளிகையில் அமைச்சர் எஸ்பி வேலுமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை ஏதும் இல்லை.

பாக்கு மட்டை

பாக்கு மட்டை

தண்ணீர் பிரச்சினையால் ஹோட்டல்கள் எதுவும் மூடப்படவில்லை. ஹோட்டல்களில் வாழை இலை, பாக்கு மட்டைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம். தண்ணீர் பிரச்சினை உள்ளதாக சம்பந்தப்பட்ட ஐடி நிறுவனத்தினர் கூறினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என தெரிவித்திருந்தார்.

2 டிஎம்பி

2 டிஎம்பி

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் வேலுமணி பொய் சொல்லி இருக்கிறார். பக்கத்து மாநில முதல்வர்களை சந்தித்து 2 டி.எம்.சி. நீரையாவது தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

English summary
K.S.Alagiri criticises Tamilnadu government for water crisis. He asked government to get water from neighbour states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X