சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி, லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் தேர்தலை சந்திப்பது என்பது உறுதியாகிவிட்ட ஒன்றுதான். ஆனால் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள்தான் நடந்து வருகின்றன.

K.S. Alagiri is not going to contest in Loksabha election?

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது. இதில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்வதற்கு முன்னதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்குடன் தமிழக காங்கிரஸ் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவிடம் காங்கிரஸ் கட்சி தொகுதி பட்டியல் அளித்துள்ளது. அதில் கடலூர் தொகுதியை கேட்கவில்லை என தெரிகிறது.

கே எஸ் அழகிரி வழக்கமாக கடலூர் தொகுதியில் போட்டியிடுவார். எனவே அத்தொகுதி கேட்கப்படாததால் கே எஸ் அழகிரி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல்கள் வந்துள்ளன.

English summary
TN Congress Committee President K.S. Alagiri is not going to contest in Loksabha elections, as Cuddalore MP constituency is not demanded by Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X