சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எம்.பி" இளையராஜா தகுதியானவர்தான்.. ஆனால் இப்போ குடுத்தது கொஞ்சம் சறுக்கலாக இருக்கு.. கே எஸ் அழகிரி

Google Oneindia Tamil News

சென்னை: இளையராஜா தகுதியானவர்தான், ஆனால் இப்போது எம்பி பதவி கொடுத்ததுதான் கொஞ்சம் சறுக்கலாக இருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Ilaiyaraaja MP Post | இளையராஜாவுக்கு Rajya Sabha MP பதவி *India

    இசைஞானி இளையராஜா எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். ஆனால் தனது பாடல்கள் மூலம் ஒடுக்குமுறை, ஜாதிய வன்மம் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இவரது சகோதரர் கங்கை அமரன் பாஜகவில் இருக்கிறார்.

    இந்த நிலையில் அண்மையில் பிரதமர் மோடி குறித்து "அம்பேத்கரும், மோடியும்" என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அந்த புத்தக முன்னுரையில் அம்பேத்கர் உயிருடன் இருந்திருந்தால் பிரதமர் மோடியின் ஆட்சியை பற்றி பெருமைப்பட்டிருப்பார்.

    தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் கருத்தரங்கு.. பிரதமர் பங்கேற்பு.. வாரணாசியில்..!தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான 3 நாள் கருத்தரங்கு.. பிரதமர் பங்கேற்பு.. வாரணாசியில்..!

    அம்பேத்கர்

    அம்பேத்கர்

    அம்பேத்கருக்கும் மோடிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் வறுமையையும் அடக்குமுறையையும் அனுபவித்தவர்கள். ஆகவே இந்த புத்தகம் சில விஷயங்களை முன்னிலைப்படுத்த இதனை இளைய தலைமுறைக்கு பரிந்துரைக்கிறேன் என இளையராஜா எழுதியிருந்தார். இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அம்பேத்கருடன் மோடியை ஒப்பீடு

    அம்பேத்கருடன் மோடியை ஒப்பீடு

    அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசியதற்கு திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூகவலைதளங்களில் கூட கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடி குறித்து கூறிய கருத்தை இளையராஜாவிடம் கங்கை அமரன் கேட்டறிந்து அதை ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதில் தன்னுடைய மனதிற்கு பட்டதை சொல்லியுள்ளதாகவும் இது தன்னுடைய கருத்து என்றும், நான் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கவில்லை என்றும் தான் ஒரு அரசியல்வாதி அல்ல என்றும் இளையராஜா தெரிவித்ததாக கங்கை அமரன் தெரிவித்திருந்தார்.

    இளையராஜா

    இளையராஜா

    இதையடுத்து இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைக்கும் என்றார்கள், நியமன எம்பி பதவி கிடைக்கும் என்றார்கள். அதற்கேற்ப இளையராஜாவை நியமன எம்பியாக நியமித்தது குறித்து பிரதமர் மோடி நேற்றைய தினம் அறிவித்தார். இதை பலர் வரவேற்றாலும் பலர் எதிர்வினையாற்றித்தான் வருகிறார்கள்.

    தமிழக காங்கிரஸ்

    தமிழக காங்கிரஸ்

    அந்த வகையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இளையராஜா மிகப் பெரிய இசை மேதை. எல்லோராலும் விரும்பப்பட கூடியவர். பாராட்டப் படக் கூடியவர். ராஜ்யசபா உறுப்பினராவதற்கான எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது.

    சறுக்கல்

    சறுக்கல்

    அவரது கடந்த கால அரசியல், நிகழ்காலத்தில் அவர் இசைக்காக ஆற்றி வரும் பெரும் தொண்டு ஆகியவற்றுக்காக இளையராஜாவுக்கு எவ்வளவு பெரிய பதவியையும் மதிப்பையும் மரியாதையையும் தரலாம். அதை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால் இதில் சிரமமும் சிக்கலுமான விஷயம் என்னவென்றால் இத்தனை காலம் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசிய பிறகு இந்த பதவியை கொடுத்ததுதான் கொஞ்சம் சறுக்கலாக இருக்கிறது என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

    English summary
    TN Congress Committee President K.S.Alagiri says that Ilayaraja deserves for MP post or anyother higher post, but it was given after praising PM Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X