சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

CBSE பாடத்திட்ட தயாரிப்பு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்... படிப்பில் விஷமத்தனம் வேண்டாம் -தமிழக காங்கிரஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட தயாரிப்பு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மறுபரிசீலனை

மறுபரிசீலனை

சிபிஎஸ்இ 7 ஆம் வகுப்பு பாடத்தை ஆராயும் போது, இந்திய நாட்டின் வரலாறு இரு வேறு விதமாக கற்பிக்கப்படுகிறது. இந்திய வரலாறு கற்பிக்கப்படுவதில் வட இந்தியாவும் தென்னிந்தியாவும் வேறுபட்டு நிற்கின்றன. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் எப்போதும் தேசிய அளவில் பாடத் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி முறை புதிய அவதாரம் எடுத்திருக்கும் இன்றைய காலக் கட்டத்தில், சிபிஎஸ்இ-யின் பாடத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.

வரலாற்றுப் பாடம்

வரலாற்றுப் பாடம்

நம்மிடம் இருந்து தொலைவில் இருக்கும் வரலாற்றை விட, குழந்தையுடன் நெருக்கமாக இருக்கும் வரலாற்றிலிருந்து நாம் தொடங்கலாம். பாடங்கள் சுருக்கமாக இருக்க வேண்டும். உள்ளூர் வரலாறு, அதனைத் தொடர்ந்து மாநிலம், நாடு மற்றும் சர்வதேச வரலாற்றை கற்பிக்கலாம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு வரலாற்றுப் பாடங்கள் இருக்க முடியுமா? இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த, தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட பாண்டிய வம்சத்தைப் பற்றி, தமிழக குழந்தைகளுக்கே தெரியாத நிலை உள்ளது. சோழர்கள் மற்றும் பிற பிரபலமான பேரரசுகள் வரலாற்றையும் பாடத் திட்டத்தில் சேர்க்கலாம்.

காங்கிரஸ் புகார்

காங்கிரஸ் புகார்

இன்றைக்கு இருக்கும் இணைய வசதியின் மூலம், 2 அல்லது 3 பாடங்களைக் கூட படிக்க முடியும் என்றால், டெல்லிக்கு வெளியே உள்ள வரலாற்றையும் நாம் நிச்சயம் இடம் பெறச் செய்யலாம். குழந்தைகள் தங்களை அடையாளம் கண்டுகொள்ளும் உணர்வை அதிகரிக்க வரலாறு உதவ வேண்டும். பொதுவாக தேசிய அளவிலான பாடத்திட்டத்தில் தென்னகத்தைச் சார்ந்த வரலாறுகள் புறக்கணிக்கப்படுகின்றன. பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்களை எல்லாம் நீக்கிவிட்டு, ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருப்போரை வைத்து பாடத்திட்டத்தை தயாரிக்கின்றனர்.

விஷமத்தனம்

விஷமத்தனம்

இதன்மூலம் இந்துத்வா கொள்கைகளை மறைமுகமாக திணிக்கும் போக்கு உள்ளது. இந்தியாவில் உள்ள மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் விஷமத்தனமாக பாடத்திட்டத்தை பாஜக அரசு கொண்டு வருகிறது. இதன்மூலம் பன்முகத்தன்மை கொண்ட இந்திய கலாச்சாரத்தை சிதைக்கும் முயற்சி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. எனவே, வரலாறு குறித்த பாடத்திட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும். அதற்கேற்றாற்போல், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

English summary
K.S.Azhagiri Says, RSS Making CBSE Syllabus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X