அழும் சீனை கூட சிரிச்சிகிட்டே கேட்கும் மீனா.. இப்போ அழுவது மனவேதனையா இருக்கு.. கே.எஸ்.ரவிக்குமார்
சென்னை: அழும் காட்சியை கூட சிரித்துக் கொண்டே கேட்கும் நடிகை மீனா தற்போது அழுவதை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை மீனா- தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களை நடித்துள்ளார். அவரது கண்கள் அழகாக இருக்கும் என்பதால் அவரை கண்ணழகி என ரசிகர்கள் அழைப்பர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், மோகன்லால், கார்த்திக், வெங்கடேஷ் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.
உதய்பூர் டெய்லர் கொலை! தமிமுன் அன்சாரி கண்டனம்! சட்டத்தின் மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும்!

நைனிகா
இவர்களுக்கு நைனிகா எனும் மகள் உள்ளார். இவரும் விஜய் நடித்த தெறி படத்தில் நடித்துள்ளார். மென்பொருள் பொறியாளரான வித்யாசாகருடன் மீனா பெங்களூரில் வசித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மீனா உள்பட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சிகிச்சை
இதையடுத்து சிகிச்சை எடுத்துக் கொண்டதால் கொரோனா தொற்று அனைவருக்கும் நீங்கிவிட்டது. வித்யாசாகருக்கும் கொரோனா வந்து தொற்று நீங்கியது. எனினும் அவருக்கு அவ்வப்போது உடல் நிலை பாதிப்பை தந்துக் கொண்டே இருந்தது. பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இரு நுரையீரல்கள்
பின்னர் அவரது இரு நுரையீரல்களும் பாதிப்படைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வித்யாசாகருக்கு மாதக்கணக்கில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வந்தது.

நுரையீரல் தொற்றா
இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார். உண்மையில் அவரது இறப்புக்கு காரணம் கொரோனாவா இல்லை அதன் பிறகு ஏற்பட்ட நுரையீரல் தொற்றா என தெரியவில்லை. இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் வைக்கப்பட்ட வித்யாசாகர் உடலுக்கு ரஜினிகாந்த் , சரத்குமார், குஷ்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அழும் சீனை
வித்யாசாகரின் மரணம் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அவரது உடலுக்கு இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அஞ்சலி செலுத்தினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வித்யாசாகர் இறப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. படப்பிடிப்புகளில் அழும் சீனை கூட சிரித்துக் கொண்டே கேட்கும் மீனா தற்போது அழுவதை பார்க்கவே மனம் கஷ்டமாக இருக்கிறது. மீனாவின் தாய் அவரது பேத்தியை நினைத்து அழுவதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. மரணம் வரும் போகும்தான். ஆனால் அகால மரணம் எனும் போது அதை தாங்க முடியவில்லை என்றார்.