சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களையெல்லாம் சுட்டா யாரு இருக்கா கேட்க.. சட்டம் கூட இல்லையே.. நறுக்கென்று கேட்கும் காளியம்மாள்

வடசென்னையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kali ammal NTK Candidate: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் பேட்டி- வீடியோ

    சென்னை: "சிட்டுக்குருவியை சுட்டா அதை கேட்க சட்டம் இருக்கு.. ஆனா மீனவர்களை சுட்டால்.. எங்களுக்கு யாரு இருக்கா?" என்று சுருக்கென்றும், நறுக்கென்றும் கேள்வி கேட்கிறார் காளியம்மாள்!

    நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர்தான் காளியம்மாள். கட்சியில் இவர் சேர்ந்தது என்னமோ கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான்! ஆனால் 10 வருடங்களாகவே மீனவ மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார் காளியம்மாள்!

    காளியம்மாளின் எளிமையான தோற்றமும், உறுதியான பேச்சும் மக்களை சீக்கிரமாக ஈர்த்து கொண்டு போய்விட்டது. சென்னை ராயபுரம் பனைமரத்தொட்டி பகுதியில் காளியம்மாள் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

    நாம் தமிழர் கட்சி

    நாம் தமிழர் கட்சி

    அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது சொல்லும்போதுகூட, "தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மாற்றத்திற்கான கட்சியாகதான் நாம் தமிழர் கட்சி உள்ளது.

    சிக்கல் வர்மாவின் இயக்கத்தில் சசிகலா.. புது குண்டுடன் ரெடியாகிறார் ராம் கோபால் வர்மா!

    ஜனநாயகம்

    ஜனநாயகம்

    மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து அதனை சரிசெய்யும் திட்டவரைகள் எங்களிடம் தயார் நிலையில் உள்ளது. நாங்கள் பணநாயகத்தை நம்பி தேர்தலில் நிக்கவில்லை. ஜனநாயகத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறோம்" என்றார்.

    போராடுவேன்

    போராடுவேன்

    காளியம்மாள் சொல்கிறார், "எம்பியாக சென்றால் பாராளுமன்றத்தில் மக்கள் உரிமைகளை கேட்டு பெறுவேன்.. இல்லையென்றால், அதே பாராளுமன்றத்தில் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராடுவேன்" என்கிறார். காளியம்மாளின் இந்த பேச்சுதான் பெரும்பாலான இளைஞர்களை ஈர்த்துள்ளது.

    எளிமையான வேட்பாளர்

    எளிமையான வேட்பாளர்

    எப்படியும் மீனவ சமுதாய மக்களின் வாக்குகளை காளியம்மாள் நிச்சயம் பெறுவார் என்ற அளவுக்கு இவரது பிரச்சாரங்கள் அமைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு எந்தவித பின்புலமும் இல்லாமல் பிரச்சாரத்தில் கலக்கி வருகிறார் இந்த எளிமையான வேட்பாளர்!

    English summary
    Kaali ammal campaigned in North Chennai on behalf of Naam Tamilar Party and told that "I will fight for the fishermen"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X