சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த எழவுக்காகவாவது இந்த திமுக, அதிமுக பண்ணி தொலைச்சிருக்க கூடாதா?.. காளியம்மாள் ஆவேசம்

வடசென்னை பிரச்சாரத்தின்போது ஓட்டுக்கு பணம் குறித்து கடுமையாக விமர்சித்தார் காளியம்மாள்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாம் தமிழர் வடசென்னை வேட்பாளர் யார் தெரியுமா?- வீடியோ

    சென்னை: ஓட்டுக்கு பணம் ஏன் தர்றே.. என் வயிறு எரியுது.. எப்படி ஆக்கிட்டாங்க இந்த ஜனநாயகத்தை" என்று வடசென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் குமுறி கொட்டுகிறார்.

    வடசென்னை வேட்பாளராக காளியம்மாள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். எளிமையான வேட்பாளரிடமிருந்து எழுச்சி மிகு வார்த்தைகளா? என்று மீனவ மக்கள் மட்டுமல்லாது தமிழக மக்களே வியந்து பார்க்கிறார்கள்.
    இவர் பிரச்சாரத்தில் பேசுகிறார், "இவங்க என்னப்பா.. எங்க பார்த்தாலும் கத்தறாங்கன்னு எங்களை பார்த்து சொல்றாங்க. நாங்க ஏன் கத்தறோம்? வேலை வெட்டி இல்லாம, திங்க சோறு இல்லாமயா கத்தறோம்?

    உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா.. எப்படிடா எங்க கிட்ட ஓட்டு கேட்டு வர்றீங்க?.. சீமான் சாடல்உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா.. எப்படிடா எங்க கிட்ட ஓட்டு கேட்டு வர்றீங்க?.. சீமான் சாடல்

    ஒரே பெண் வேட்பாளர்

    ஒரே பெண் வேட்பாளர்

    திமுகவுக்கு,. அதிமுகவுக்கு ஓட்டு போட்டுட்டு, என் மக்களும் என் மக்களுடைய பிள்ளைகளும் நடுத்தெருவுல நின்னுடுமேன்னு கத்தறோம். எப்பவுமே வலி உணர்ந்தவன் ஆளாது, வலியின் பிரச்சனை தீராது. சீட் தந்ததில கவன ஈர்ப்புக்காக உங்க கட்சியில 50 சதவீதம் இடஒதுக்கீடு தரப்பட்டதா என்று ஒரு அம்மா என்னை கேட்டாங்க. அந்த எழவுக்காகவாவது இந்த திமுக, அதிமுக பண்ணி தொலைச்சிருக்க கூடாதா?

    பணம் பிரிக்க சண்டை

    பணம் பிரிக்க சண்டை

    12 கட்சிகளோட கூட்டணி வைச்சிக்கிட்டு இருக்கிறாங்களே, அவங்க ஏன் கவனத்தை ஈர்க்கலையோ? இந்த வட சென்னை தொகுதியில் 23 வேட்பாளர்கள் நிற்கிறார்கள், ஆனால் நாம் தமிழர் கட்சியில் மட்டும்தான் பெண் வேட்பாளர். மக்கள் நலனிலும் இவர்கள் கவனம் செலுத்தவில்லை. ஏன்னா.. நேரம் இல்லை. 15 நாள் கூட்டணி சண்டை, 20 நாள் பணம் பிரிக்கிறதுல சண்டை. 30 நாள் தொகுதி ஒதுக்கீட்டில் சண்டை.

    வயிறு எரியுது

    வயிறு எரியுது

    அப்பறம் பிரச்சாரத்தின்போது அதுக்கு மேல கொடுமை. பைக்கில் வந்தால் 400 ரூபாயாம், கோலம் போட்டால் 200 ரூபாய், கொடியை பிடித்தால் 1000 ரூபாய், கோஷம் போட்டால் 1500 ரூபாய்.. என் வயிறு எரியுது. எப்படி ஆக்கிட்டாங்க இந்த ஜனநாயகத்தை? ரோடா போட்டு வச்சிருக்காங்க?

    ரோடா இது?

    ரோடா இது?

    நானே நாலு முறை தடுமாறி விழுந்துட்டேன். பாக்கியலட்சுமி அக்கா இல்லைன்னா இன்னைக்கு என் 2 பல்லு போயிருக்கும். அப்படி இருக்கு இந்த ரோடுங்க" என்றார்.

    English summary
    Naam Tamizhar Party Candidate Kaaliammal campaigned in North Chennai and attacked TN gov
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X