சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காணும் பொங்கல்.. நம்ம மக்கள் செய்த வேலையை பாருங்க.. மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பை

Google Oneindia Tamil News

Recommended Video

    மெரினாவில் நம்ம மக்கள் செய்த வேலையை பாருங்க

    சென்னை: மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பையும், பெசன்ட் நகர் கடற்கரையில் 4 டன் குப்பையும் அகற்றப்பட்டுள்ளதாம். சென்னை மாநகராட்சி முழுவதும் 4,500 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது என்கிறது மாநகராட்சி தகவல்.

    தமிழகம் முழுவதும் நேற்று காணும் பொங்கல் வழக்கமான உற்சாகத்தோடு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள பொழுது போக்கு மையங்கள், வழிபாட்டு தலங்கள், வண்டலூர் மிருக காட்சி சாலை, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை, பூங்கா பகுதிகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக ஒன்று கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.

    Kaanum Pongal: 12 tons of garbage have been dumped at Marina Beach

    ஆனால், வந்த மக்களில் பெரும்பாலானோர், குப்பைகளை, குப்பை போடும் இடங்களில் போடாமல் ஆங்காங்கு விட்டுச்சென்றுள்ளனர்.
    இதுபோன்று குவியும் குப்ப்ைகளை அகற்ற சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், கடும் சிரமப்பட்டனர்.

    மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மெரினா கடற்கரையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுடன் 130 பணியாளர்கள் கூடுதலாகவும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுடன் 30 கூடுதலாகவும் பணியாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    "சித்தி 2" ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. "சின்னம்மா" வரபோறது எப்பப்பா.. அதிமுக, அமமுக, பாஜக வெயிட்டிங்!

    இதுவரை மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பையும், பெசன்ட் நகர் கடற்கரையில் 4 டன் குப்பையும் அகற்றப்பட்டுள்ளதாம். சென்னை மாநகராட்சி முழுவதும் 4,500 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது என்கிறது மாநகராட்சி தகவல்.

    காணும் பொங்கலையொட்டி, மக்களின் சுகாதாரத்தை கண்காணிக்க சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன. மெரினா கடற்கரையில் 2 முகாம்கள், பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் தலா ஒரு முகாம் அமைக்கப்பட்டன. ஆக மொத்தம் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    English summary
    So far, 12 tons of garbage have been dumped at Marina Beach and 4 tons of debris at Besant Nagar beach. About 4,500 tonnes of garbage has been disposed throughout the city, according to the Chennai corporation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X