சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்த சோதனை.. கூடவே இருந்த கடம்பூர் ராஜுவிற்கு கொரோனா! தனபாலும் பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை : முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுக்குழு, இபிஎஸ் இல்லத்தில் ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஒபிஎஸ்-சை நீக்கிவிட்டு புதிய பொருளாளராக கே.பி. முனுசாமியை நியமிக்க இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் அவரே பொதுச்செயலாளர்பிறகு அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக காலையில் யூகங்கள் கிளம்பின.

இதனால் அதிமுக அலுவலகம் முன்னர் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கூடினர். தொண்டர்களின் உற்சாக முழக்கத்துக்கிடையே கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

நாயரையும், பிராமணப் பெண்ணையும் தலைவராக ஏற்ற கட்சி அதிமுக -செல்லூர் ராஜூ நாயரையும், பிராமணப் பெண்ணையும் தலைவராக ஏற்ற கட்சி அதிமுக -செல்லூர் ராஜூ

ஒற்றைத் தலைமை

ஒற்றைத் தலைமை

ஆனால் எதிர்பார்த்தது போல ஒற்றை தலைமை விவகாரம் குறித்து உறுதியான முடிவுகளை அல்லது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிப்பது கட்சியிலிருந்து பதவியிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்குவது உள்ளிட்ட எந்தவித அறிவிப்பும் எதிர்பார்த்தபடி வெளியிடவில்லை. மேலும் ஜூலை 11ம் தேதி நடக்க இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனைகள் மட்டுமே நடைபெற்றதாகவும் இதில் அரசியல் தொடர்பாக வேறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

நிர்வாகிகள் ஆதரவு

நிர்வாகிகள் ஆதரவு

எதுவாக இருந்தாலும் பொதுக்குழு கூட்டத்தில் தான் எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறினார். மேலும் தொடர்ந்து பேசியவர் அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்து உள்ளார் எனவும் துரோகத்தின் அடையாளம் ஓ பன்னீர்செல்வம் எந்த தீய அதிமுக தொண்டர் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார் என கடுமையாக பேசினார் அதே நேரத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு சில நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியானது.

நிர்வாகிகள் கடிதம்

நிர்வாகிகள் கடிதம்

75 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர் எனவும் 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்து உள்ளதாக கூறப்பட்டது. அதில் பண்ருட்டி ராமச்சந்திரன் புத்திசந்திரன் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 4 பேர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கூட்டத்திற்கு வர முடியாது என கடிதம் கொடுத்து உள்ளார்கள் எனவும் கூறப்பட்டது. ஆனால் முழுமையான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால், எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நடைபெற்ற அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.

Recommended Video

    பன்னீர் இப்போ கண்ணீர் செல்வம்.. சுயநலவாதி ஓபிஎஸ்.. இப்படி செய்யலாமா? போட்டுத்தாக்கிய ராஜன் செல்லப்பா
    நிர்வாகிகள் கலக்கம்

    நிர்வாகிகள் கலக்கம்

    மேலும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் கடம்பூர் ராஜு நெருக்கமாக நின்று பேட்டி அளித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவருக்கு உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிமுக நிர்வாகிகளை சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் அதிமுகவில் சற்றே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    Kadambur Raju had participated in the consultations at the General body meeting, EPS House, while former Speaker Danapal had confirmed the corona vulnerability to former minister Kadambur Raju. It has also been reported that Corona has confirmed to Edappadi Palanisamy's aide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X