சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமதாசுக்கு எதிர்ப்பு.. காடுவெட்டி குருவின் சகோதரி.. வீரப்பனின் மனைவி த.வா.க- வில் ஐக்கியம்

Google Oneindia Tamil News

Recommended Video

    வேல்முருகன் கட்சியில் இணைந்த காடுவெட்டி குருவின் தங்கை மற்றும் வீரப்பனின் மனைவி- வீடியோ

    சென்னை: காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்.

    சென்னை அரும்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இருவரும் கட்சியில் இணைந்தனர்.

    Kaduvetti Gurus sister and Veerappans wife Jointed In Tamizhaga Vazhvurimai Katchi

    இதனைத் தொடர்ந்து, பேசிய அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், நான் வாக்குறுதி தரமாட்டேன் என்றும் ஆனால் செய்ய வேண்டியதைச் செய்வேன் எனவும் தெரிவித்தார்.

    இருவர் மீது இனியும் ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக்கொள்வது தனது கடமை என்றும் பேசினார்.

    மேலும், காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை தனது சகோதரனுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் எதிராக ராமதாஸ் மற்றும் ஜிகே மணி ஆகியோர் இழைத்த அநீதிக்கு பாடம் புகட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார் என்றும் கூறினார்.

    இந்த தேர்தலுடன் திமுக-வின் சகாப்தம் முடிந்து விடும்... முதல்வர் பழனிசாமி பேச்சு இந்த தேர்தலுடன் திமுக-வின் சகாப்தம் முடிந்து விடும்... முதல்வர் பழனிசாமி பேச்சு

    காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்திருப்பது, நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு வாக்குவங்கியை பாதிக்கும் என கூறப்படுகிறது.

    ஏற்கனவே, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமகவில் இருந்து நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    LokSabha elections 2019: Kaduvetti Guru's sister and Veerappan's wife Jointed In Tamizhaga Vazhvurimai Katchi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X