• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தாத்தா கக்கனின் அடியொற்றி.. நேர்மையான காவல் பணியில்.. பேத்தி ராஜேஸ்வரிக்கு குடியரசு தலைவர் பதக்கம்!

|

சென்னை: எந்த சொத்தும், சுகமும் இல்லாமல்.. வெறும் தியாகத்தையும், தூய எளிமையையும் மட்டுமே கையில் பற்றி கொண்டு மறைந்தவர் கக்கன்.. அவரது பேத்தி ராஜேஸ்வரி இன்று ஜனாதிபதி கையால் டெல்லியில் விருது வாங்குகிறார்!

கக்கன் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமகன் - கறைபடியா கைகளின் எஜமானர் - அரசியலில் சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர், தமிழக அமைச்சர் என பதவிகளை வகித்தவர் - தியாகம், தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவற்றின் சொந்தக்காரர்!

18 மாத சிறை தண்டனைக்குப் பிறகு தேர்தல் களம்புகுந்தார் கக்கன்.. காமராஜர் முதல்வர் பணியில் அமரும்போது, தனது ஏழு அமைச்சர்களுள் கக்கனையும் ஒருவராக சேர்த்துக் கொண்டார்.

மிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்!

காமராஜர்

காமராஜர்

தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லக்கூடாது என சட்டம் பிறப்பித்திருந்த சமயத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கக்கனுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கி கோயிலுக்குள் ராஜ மரியாதை கிடைக்க வைத்தவர் காமராஜர்! இதைதவிர, பொதுப்பணி, மற்றும் அரிசன நலம், வேளாண்மை, உளவுத்துறை, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை பராமரிப்பு, அரிசன நலம், உள்துறை, நிதி, கல்வி, சிறைத்துறை, தொழிலாளர் நலம், அறநிலையத் துறை, போன்ற உயர்ந்த பொறுப்புகள் கக்கனின் நேர்மைக்கும் உழைப்புக்கும் அளிக்கப்பட்டவை!

ஏழ்மை - எளிமை

ஏழ்மை - எளிமை

நேர்மை, ஒழுக்கம், மக்களிடம் பழகும்விதம், கனிவான அணுகுமுறை, தொகுதிக்கு செய்த வளர்ச்சிப் பணிகள்தான் கக்கனை இன்றும் மறக்க செய்யாமல் இருக்கின்றன. கடைசிவரை ஏழ்மையிலேயே வாழ்ந்து மறைந்துபோனார் எளிமையின் சின்னம் கக்கன்.. இவரது குடும்பத்தை பற்றி பெரிதாக யாரும் அறிந்திருக்கவில்லை.. கக்கனுக்கு 6 குழந்தைகள்

ராஜேஸ்வரி

ராஜேஸ்வரி

இதில் 5 ஆண்கள்... ஒரு பெண் குழந்தை. 3-வதாக பிறந்த பெண் குழந்தைதான் கஸ்தூரி சிவசாமி ஆவார். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்... இவருடைய கணவர் சிவசாமி ஓய்வு பெற்ற என்ஜினியர் ஆவார். இந்த தம்பதிக்கு பிறந்த 3-வது குழந்தைதான் ராஜேஸ்வரி... ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று மதுரையில் சிபிசிஐடியில் பணிபுரிந்து வந்தார். இதற்கு பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

விருது

விருது

இந்த கடத்தல் பிரிவில் ராஜேஸ்வரியின் செயல் ஏராளமானது.. வீரதீர மிக்கது.. அவருடைய சேவையை பாராட்டி... நம் தமிழக அரசு பல விருதுகளை வழங்கி அவரை கவுரவித்துள்ளது.. இந்நிலையில் இன்றைய தின குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி விருது வழங்குவதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்கள் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் தமிழக போலீஸ் துறையில் 24 அதிகாரிகளுக்கு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

குடியரசு தலைவர்

குடியரசு தலைவர்

காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரியும் ஒருவர் ஆவார்... டெல்லியில் நடக்க உள்ள பிரம்மாண்டமான விழாவில் ராஜேஸ்வரி ஐபிஎஸ் சிறந்த போலீஸ் சேவை செய்தமைக்கான விருதை பெறுகிறார். எத்தனையோ இன்னல்களுடன் தன் போராட்ட வாழ்வை முடித்து கொண்ட கக்கனால், விருது வாங்கும் தன் பேத்தியை பார்க்க இன்று உயிருடன் இல்லாததுதான் பெரும் குறையாக உள்ளது!

 
 
 
English summary
24 Tamil Nadu Police Officers Awarded including presidential award to kakans grand daughter rajeswari
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X