சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் சுட்டுவிரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன்.. கலைராஜன் பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    வி.பி.கலைராஜன் பரபரப்பு பேட்டி- வீடியோ

    திருச்சி: ஸ்டாலின் சுட்டு விரலை நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன் என வி. பி. கலைராஜன் தெரிவித்தார்.

    தினகரனின் அமமுகவின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் வி.பி.கலைராஜன். இவர் கட்சியில் தினகரனிடம் செல்வாக்கு பெற்றவராக இருந்து வந்தார்.

    Kalairajan says that there is no differnce of opinion with TTV Dinakaran

    இந்த நிலையில் அவரை திடீரென கட்சியிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் நேற்றிரவு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் கட்சியின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாண வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி. கலைராஜன் நீக்கப்படுகிறார்.

    உங்கள் வாக்கு அன்பு சகோதரி கனிமொழிக்கே.. வாய் தவறி பிரசாரம் செய்த விளாத்திக்குளம் அதிமுக வேட்பாளர்! உங்கள் வாக்கு அன்பு சகோதரி கனிமொழிக்கே.. வாய் தவறி பிரசாரம் செய்த விளாத்திக்குளம் அதிமுக வேட்பாளர்!

    கட்சியின் மாண்பிற்கு களங்கம் விளைவித்துவிட்டார் என அறிக்கையில் கூறியுள்ளார். இந்த நிலையில் வி. பி.கலைராஜன் திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

    அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திராவிட இயக்கத்தை காக்கும் தகுதியுடைய ஒரே தலைவர் ஸ்டாலின். மதவாத அரசை எதிர்த்து பேச கூடிய தைரியம் உள்ளவர் ஸ்டாலின்.

    ஸ்டாலின் சரியான தலைமை என்பதால் திமுகவில் இணைந்தேன். சுட்டுவிரல் நீட்டினால் போதும் சிட்டாக பறந்து பணி செய்வேன். தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை.

    விரைவில் தினகரனிடம் இருப்பவர்களும் திமுகவில் இணைவார்கள் என ஒரு குண்டையும் போட்டார் கலைராஜன்.

    English summary
    V.P. Kalairajan who joins in DMK says that there is no difference of opinion with TTV Dinakaran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X