சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு சேரை விட எடை குறைவு.. வியக்க வைக்கும் கலாம் சாட்.. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது!

தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட கலாம் சாட் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kalamsat: தமிழக மாணவர்கள் உருவாக்கிய கலாம் சாட் விண்ணில் ஏவப்பட்டது

    சென்னை: தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட கலாம் சாட் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த சாட்டிலைட் உலகிலேயே மிகவும் எடை குறைந்த சாட்டிலைட் ஆகும்.

    நேற்று இரவு 11.30 மணிக்கு 2 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட். இஸ்ரோ மைக்ரோசாட்-ஆர், கலாம் சாட் செயற்கைகோளை ஏவியது.

    இந்த இரண்டு சாட்டிலைட்களும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் கலாம் சாட் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து இருக்கிறது. பெரிய வைரலாகி உள்ளது.

    என்ன சாட்டிலைட்

    என்ன சாட்டிலைட்

    கலாம் சாட் என்பது தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்டது ஆகும். Space Kidz India என்ற நிறுவனம்தான் இந்த கலாம்சாட் செயற்கைக் கோளை உருவாக்கி சாதனை படைத்த டீம். ஸ்ரீமதி கேசன் தலைமையிலான இந்த நிறுவனத்தில், 7 கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழு இதை உருவாக்கி இருக்கிறது. இந்த குழுவிற்கு தமிழக மாணவர் ரிபாத் ஷாருக்தான் தலைவர். இந்த சாட்டிலைட் நானோ சாட்டிலைட்டுக்களுக்கு இடையே நடத்தப்படும் பரிவர்த்தனைகளை சோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட சோதனை சாட்டிலைட் ஆகும் இது. இதை உருவாக்க 12 லட்சம் செலவாகி உள்ளது.

    எப்படி இருக்கும்

    எப்படி இருக்கும்

    இதன் எடை வெறும் 64 கிராம் மட்டுமே. அதேபோல் இது 3.8 கனமீட்டர் மட்டுமே வடிவம் கொண்டது. இது 3 டி பிரிண்ட்டர் மூலம் கார்பன் பைபர் பாலிமர் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் சில பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    காசு வாங்கவில்லை

    காசு வாங்கவில்லை

    இதை இஸ்ரோ இலவசமாக விண்ணில் அனுப்பி உள்ளது. பொதுவாக சாட்டிலைட்டுகளை விண்ணில் அனுப்ப இஸ்ரோ பணம் பெறும். ஆனால் இங்கு மாணவர்களின் செயலை ஊக்குவிக்கும் வகையில் காசு வாங்காமல் விண்ணில் ஏவி இருக்கிறார்கள்.

    சூப்பர் சாதனை

    இந்த சாட்டிலைட்தான் உலகிலேயே மிகவும் எடை குறைந்த சாட்டிலைட் ஆகும். இது தற்போது ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து இருக்கிறது. சரியாக விண்ணில் ஏவப்பட்ட இது தன்னுடைய பணியை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu students made KalamSat becomes viral after successfully launched into space by ISRO.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X