சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மாணவர்கள் நிகழ்த்திய சாதனை.. வெற்றிகரமாக ஏவப்பட்ட கலாம் சாட்.. பெருமிதம்!

கலாம் சாட் என்ற உலகின் மிக குறைந்த எடை கொண்ட நானோ சாட்டிலைட்டை விண்ணில் ஏவி தமிழக மாணவர் குழு சாதனை படைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kalamsat: தமிழக மாணவர்கள் உருவாக்கிய கலாம் சாட் விண்ணில் ஏவப்பட்டது

    சென்னை: கலாம் சாட் என்ற உலகின் மிக குறைந்த எடை கொண்ட நானோ சாட்டிலைட்டை விண்ணில் ஏவி தமிழக மாணவர் குழு சாதனை படைத்து இருக்கிறது.

    நேற்று கலாம் சாட் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது தற்போது திட்டமிட்டபடி சரியாக செயல்பட தொடங்கி இருக்கிறது.

    இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் மூலம் இந்த கலாம் சாட் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை உருவாக்கியது தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    யார் இவர்கள்

    மொத்தம் 7 பேர் கொண்ட மாணவர்கள் குழுதான் இதை உருவாக்கியது. இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவர். இவர்கள் Space Kidz India என்ற குழுவை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் தற்போது இளங்கலை படித்து வருகிறார்கள்.

    சூப்பர் பாஸ்

    சூப்பர் பாஸ்

    இந்த குழுவிற்கு தமிழக மாணவர் ரிபாத் ஷாருக்தான் தலைவர். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் அருகே இருக்கும் பள்ளப்பட்டி. இவர்கள் குழு ஏற்கனவே நாசாவில் நடந்த சில போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள். நாசாவின் இண்டர்ன்ஷிப்களில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    எவ்வளவு செலவு

    இதை உருவாக்க 12 லட்சம் செலவாகி உள்ளது. இதில் நிறைய வெளிநாட்டு பொருட்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த சாட்டிலைட் நானோ சாட்டிலைட்டுக்களுக்கு இடையே நடத்தப்படும் பரிவர்த்தனைகளை சோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட சோதனை சாட்டிலைட் ஆகும் இது. இவர்கள் இதை உருவாக்க 6 வருடம் ஆகியுள்ளது.

    பாராட்டு

    முழுக்க முழுக்க 3டி பிரிண்டரின் உதவியுடன் இதை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. முக்கியமாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் இவர்களை பாராட்டி இருக்கிறார்.

    English summary
    KalamSatL: Tamilnadu students behind the project gets a special mention after the success by ISRO.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X