• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வரலாறு படைத்த கல்லக்குடி.. இன்னும் டால்மியாபுரம் என்றே அழைப்பதா.. கிளப் ஹவுஸ் விவாதம்!

Google Oneindia Tamil News

சென்னை: "வரலாறு படைத்த கல்லக்குடியை இன்னும் டால்பியாபுரம் என்றே அழைப்பது வேதனையாக இருக்கிறது.. தலைவர்களின் நினைவாக இடப்பட்டுள்ள இடங்களின் பெயர்களை, முழுமையாக இனி உச்சரிக்க வேண்டும்" என்று அரக்கர் மன்றம் சார்பில் அழுத்தமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்லக்குடி போராட்டம் என்பது என்ன? அதில் கருணாநிதியின் பங்கு என்ன? இன்றளவும் கல்லக்குடியை தமிழின மக்கள் உச்சரிக்க காரணம் என்ன? ஒரு சின்ன பிளாஷ்பேக்..!

திருச்சி அருகேயுள்ள ஊரின் பெயர் கல்லக்குடி...தமிழர் வாழும் இந்த பகுதியில், ஒரு சிமெண்ட் தொழிற்சாலையை வடநாட்டை சேர்ந்த ஒருவர் நிறுவியுள்ளார்.. அதனாலேயே அந்த பகுதிக்கு டால்மியாபுரம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது...

அனைவருக்குமானவர் கலைஞர்... திமுக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை கொண்டாடிய கருணாநிதி பிறந்தநாள் அனைவருக்குமானவர் கலைஞர்... திமுக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை கொண்டாடிய கருணாநிதி பிறந்தநாள்

போராட்டம்

போராட்டம்

இந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்றுதான் திமுக போராட்டத்தை அறிவித்தது.. 1953, ஜூலை 15-ம் நாள், மிகப்பெரிய போராட்டத்தை கருணாநிதி முன்னெடுத்தார்.. அங்கிருந்த ரயில்வே ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த பலகையில் டால்மியாபுரம் என்று பொறிக்கப்பட்டிருந்தது.. இதற்கு பதிலாக கல்லக்குடி என்று எழுதப்பட்ட தாளை ஒட்டவேண்டும் என்பதுதான் இந்த போராட்டத்தின் செயல் வடிவம்.

மறியல்

மறியல்

திட்டமிட்டபடி அன்றைய தினம் காலையில் கருணாநிதி வந்து சேர்கிறார்.. டால்மியாபுரம் என்று பொறிக்கப்பட்டிருந்த பெயர் பலகையின் மீது, கல்லக்குடி என்று எழுதிய பேப்பரை ஒட்டுகிறார் கருணாநிதி... அந்த நேரம் பார்த்து ஒரு ரயில் அங்கு வரவும், கருணாநிதி உடனடியாக சென்று ரயிலின் முன்பு தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து விடுகிறார்...

கல்லக்குடி

கல்லக்குடி

அவரோடு முல்லை சக்தி, குழந்தை வேலு, கஸ்தூரி, குமாரவேலு ஆகியோரும் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு போராட்டத்தை துவக்குகிறார்கள். டால்மியாபுரத்தின் பெயரை கல்லக்குடி என்று மாற்றும்வரை ரயிலை விடமாட்டோம் என்று முழக்கமிடுகிறார்கள். இதற்கு பிறகுதான் போலீசாரும், அதிகாரிகளும் ஓடி வருகிறார்கள்..

மறியல்

மறியல்

பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். "தயவுசெய்து உங்க கோரிக்கையை ரயில்வே துறை அதிகாரிகளுக்கு எழுதுங்க.. இப்படி ரயிலை மறிப்பது சரியல்ல.. ரயிலை போக விடுங்கள்" என்று கேட்டுக் கொள்கிறார்கள்.. ஆனால், உறுதியாக மறுத்துவிடுகிறார் கருணாநிதி.... இதை பார்த்த அதிகாரிகள், ரயிலை இயக்குங்கள் எனுறு உத்தரவிடுகிறார்.. ரயிலை ஓட்டினால், பயத்தில் எழுந்து தெறித்து ஓடிவிடுவார்கள் என்பது இவர்களது எண்ணம்.. ஆனால், கருணாநிதி அசரவே இல்லை.. அசையவும் இல்லை..!

கைது

கைது

கருணாநிதியை முட்டிக் கொண்டு ரயில் வந்து நிற்கிறது.. வேறு வழியில்லாமல் மிரண்டு போன போலீசார், போராட்டக்காரர்களை கைது செய்தது... ஆனால், அதற்கு பிறகும் குழு, குழுவாக பிரிந்து போராட்டங்கள் நடந்துள்ளது.. கவிஞர் கண்ணதாசனுக்கு மண்டையையே பிளந்துள்ளனர்.. ரத்தம் வழிய வழிய அவரை அடித்துள்ளனர்.. அன்று ஒரு நாளில் மட்டும் தமிழ்நாடு முழுக்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதானார்கள்... கருணாநிதி உட்பட பலருக்கு 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.. இத்துணை பாடுபட்டு பெயர் மாற்றம் செய்தும், இப்போதுவரை டால்மியாபுரம் என்றே அழைக்கப்படுவதுதான் உச்சக்கட்ட வேதனை.

 அரக்கர் மன்றம்

அரக்கர் மன்றம்

இப்படிப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த கல்லக்குடி போராட்டத்தின் அறுபதாம் ஆண்டு இன்று துவங்குகிறது.. இதை நினைவுபடுத்தும் விதமாக clubhouse ல் திமுக ஆதரவாளர்களாக தங்களை முன்னிறுத்தும் "அரக்கர் மன்றம்" சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.. அதில், விக்னேஷ் ஆனந்த், மாறன், இராஜராஜன் போன்றோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.. அப்போது மாறன் பேசியபோது, கல்லக்குடி போராட்டத்தின் காரணத்தையும், அந்த நிகழ்வையும் விளக்கி கூறினார். அதன் சுருக்கம் இதுதான்:

காரணங்கள்

காரணங்கள்

"மக்களிடம் இன உணர்வு குறைந்துவிட்டது.. வரலாறு மறைந்து கொண்டிருக்கிறது.. எதற்காக அந்த பெயர் மாற்றம் நடந்தது என்பதைகூட இன்று பலரும் அறியாமல் இருக்கிறார்கள்.. உண்மையிலேயே இந்த கல்லக்குடி போராட்டம் என்பது மும்முனை போராட்டமாகும்... தமிழகம் அப்போது எதிர்கொண்ட 3 முக்கிய காரணங்களை முன்னிறுத்தி அன்று தமிழகத்தின் 3 இடங்களில் போராட்டம் நடந்தது.

நான்சென்ஸ்

நான்சென்ஸ்

முதல் காரணம், குலகல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்ததால் அதிருப்தி அடைந்த சிலர் , பிரதமர் நேருவிடம் முறையிடுகிறார்கள்.. அதற்கு நேரு "நான்சென்ஸ்" என்று திட்டிவிடுகிறார்.. இதுதான் அதிருப்தியை தந்துவிட்டது.. தமிழக தலைவர்களை எப்படி வடநாட்டு தலைவரான நேரு, எப்படி நான்சென்ஸ் என்று சொல்லலாம் என்று கண்டனம் தெரிவித்து முதல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதுபோலவே, குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக ராஜாஜியை கண்டித்து இரண்டாவது போராட்டம் அறிவிக்கப்பட்டது. மூன்றாவது போராட்டம்தான் கல்லக்குடி பெயர் மாற்ற போராட்டம்.

இளைஞன்

இளைஞன்

இதில் கல்லக்குடி போராட்டம்தான் கருணாநிதி தலைமையில் நடந்தது.. மற்ற 2 போராட்டங்களைவிட, அதாவது ஒரு பிரதமரை எதிர்த்துநடந்த போராட்டத்தைவிட, கல்லக்குடியில் கருணாநிதி போராட்டம்தான் தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.. அதற்கு காரணம், கருணாநிதி என்ற 29 வயது இளைஞனின் போர்க்குணமும், கலைப்பார்வையும்தான்.

 போராட்ட முன்வடிவம்

போராட்ட முன்வடிவம்

ஒரு பேப்பரில் கல்லக்குடி என்று எழுதி அதை அங்கிருந்த பலகையில் ஒட்டிவிட்டு வரவேண்டும் என்றுதான் கருணாநிதிக்கு தரப்பட்டிருந்த போராட்ட முன்வடிவம்.. ஆனால், ஒரு சாதாரண போஸ்டர் ஒட்டும் இந்த போராட்டத்தை, வரலாற்று நிகழ்வாக வேறுபடுத்தி காட்டினார்.. 29 வயதான கருணாநிதியின் துடிதுடிப்பும், அணுகும் முறையும், சிந்தனையும் அவரை ஒவ்வொன்றிலும் வேறுபடுத்தி காட்டியது.. கருணாநிதியை விட எத்தனையோ மூத்த தலைவர்கள் அன்று இருந்தாலும், உயிரையும் துச்சமாக நினைத்து, ரயில் முன்பு தலையை வைத்து படுத்த செயலை பார்த்து தமிழக மக்கள் அதிர்ந்தே போய்விட்டனர்.. ஒரே நாளில் கருணாநிதி பரபரப்பாக பேசப்பட்டார்" என்று புளகாங்கிதத்துடன் கூறினார்.

போர்க்குணம்

போர்க்குணம்

இந்நிகழ்ச்சியில், திமுக ஆதரவாளர்கள் தோழர் இராஜராஜன், திமுகவின் மூத்த உறுப்பினர் அருள்பிரகாசம், டாக்டர் சாய் லஷ்மி வழக்கறிஞர் வைரமுத்து, விஜய், தோழர்கள், செந்தில்வாசன், கோபிநாத் இராமசாமி, ரவி, ஹேமா, சிவா உள்ளிட்டோர் கல்லக்குடி போராட்ட நிகழ்வின் தாக்கம் குறித்தும், இந்த போராட்டத்தில் கருணாநிதியின் போர்க்குணம் குறித்தும், போராட்டத்துக்கு பிறகு கருணாநிதிக்கு கிடைத்த அரசியல் அங்கீகாரங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

 பெயர் காரணங்கள்

பெயர் காரணங்கள்

ஆனால், அனைவரும் சேர்ந்து ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.. அதாவது, "தலைவர்களின் பெயரில் அழைக்கப்பட்ட பெயர்கள் எல்லாம் சுருங்கிவிட்டன, வேறு பெயர்களில் தற்போது அழைக்கப்படுகின்றன.. வரலாற்றில் உள்ள பெயர்களை அந்தந்த பெயர்களுடனே அழைப்பதில்லை.. உதாரணத்துக்கு அண்ணா மேம்பாலம் என்பது ஜெமினி பாலமாகிவிட்டது.. தியாகராயநகர் என்று சொல்வது இல்லை.. தி.நகர் என்கிறார்கள்..

கோரிக்கை

கோரிக்கை

கலைஞர் கருணாநிதி என்று சொல்லாமல் கேகே நகர் என்கிறார்கள்.. அதுபோல கல்லக்குடி என்று சொல்லாமல் டால்மியாபுரம் என்று இன்னமும் சொல்வது வேதனையாக இருக்கு.. வருந்தத்தக்க நிகழ்வு இது.. தலைவர்களின் நினைவாக இடப்பட்டுள்ள இடங்களின் பெயர்களை முழுமையாக உச்சரிக்க வேண்டும்" என்று அரக்கர் மன்றம் சார்பில் அனைவருமே தங்கள் ஆதங்க கோரிக்கையை அழுத்தமாக பதிவு செய்தனர்...!

கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி

குறிப்பாக, தோழர் இராஜராஜன் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி நூலில் இருந்து கல்லக்குடி போராட்டத்தைப் பற்றிய பகுதிகளை வாசித்துக் காண்பித்து அதை ஒட்டி கலைஞரின் போர்த்துகல் குறித்தும், திராவிட இன மக்களின் பகைவர்களின் போக்கு அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருப்பது குறித்தும், அந்த பகைவர்களின் போக்கை எதிர்க்கும் திராவிட இயக்கத்தின் வீரியம் குன்றாமை இருப்பது குறித்தும் விரிவாகப் பேசினார்.

நிக்சன்

நிக்சன்

திமுகவின் மூத்த உறுப்பினர் அருள்பிரகாசம் பேசும்போது, கருணாநிதிக்கு அப்போராட்டதின் பின் சென்னையில் கிடைத்திட்ட வரவேற்பு குறித்து பேசினார்.. "மவுன்ட் ரோடு வழியாக கட்டுக்கடங்காத கூட்டம் கருணாநிதியை வரவேற்க வந்து கொண்டிருக்கிறது.. அப்போது ஒரு மிகப்பெரிய புள்ளி ஒருவர் அந்த கூட்டத்தில் சிக்கி கொண்டார்.. கூட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டவர், யார் வர்றாங்க? யாருக்காக இந்த கூட்டம் என்று கேட்டுள்ளார்.. பிறகுதான் விஷயத்தை அவரிடம் சொல்லி உள்ளனர்.. அந்த புள்ளி வேறு யாருமில்லை.. பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியான நிக்சன்தான் அவர்" என்று நினைவுகூர்ந்தார்.

போராட்டம்

போராட்டம்

இதைதொடர்ந்து ஹேமா பேசும்போது, "என் அப்பா திமுகவின் மூத்த உறுப்பினர்.. தமிழுக்கு எதிராக மத்தியில் பல விவகாரங்கள் நடந்து கொண்டுதானிருந்திருக்கின்றன.. ஆனால், இதை புரட்டி போட்டதே கலைஞர் கருணாநிதிதான்.. அதுவும் இந்த கல்லக்குடி போராட்டம்தான்.. ராஜாஜிக்கு பிறகு காமராஜர் அரியணை ஏறியதும், அதாவது பிராமணர் அல்லாத ஒருவரை முதல்வராக கொண்டு வர அடிப்படை காரணமாக இருந்தே இந்த கல்லக்குடி போராட்டம்தான்" என்றார்.

விஜய் ஆனந்த்

விஜய் ஆனந்த்

அடுத்ததாக விஜய் ஆனந்த் பேசும்போது, "இந்த போராட்டத்தில் சுப.வீரபாண்டியன் அப்பா ராம சுப்பையாவும் கருணாநிதியுடன் கலந்து கொண்டார்.. ஆனால், அன்றைய தினம் அந்த போராட்டத்திற்கு பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்றே அவர் குடும்பத்தினருக்கு தெரியவில்லை.. செய்தித்தாளை பார்த்தபிறகுதான் அனைவரையும் அரெஸ்ட் செய்து ஜெயிலில் வைத்துள்ளனர் என்ற விஷயமே தெரிந்திருக்கிறது.. அதற்கு பிறகு, ராம சுப்பையா மனைவி சிறைக்கு ஓடுகிறார்.. கணவர் ஜெயிலில் இருப்பதை சிறை கம்பி வழியாக பார்த்து கண்ணீர் சிந்துகிறார்..

ஜெயில்

ஜெயில்

அப்போது கருணாநிதிதான் அவரை ஆறுதல்படுத்தி உள்ளார்.. "ஒன்னுமில்லை..ம்மா கவலைப்படாதீங்க.. நீங்க அந்த பக்கம் கம்பியில் இருந்து எங்களை பார்க்கும்போது நாங்க ஜெயிலில் இருக்கிற மாதிரி தெரியுது.. ஆனால் நாங்க இங்கிருந்து பார்த்தால், நீங்க ஜெயிலில் இருப்பதுபோல தெரியுது.. என்ன ஒரு வித்தியாசம், நீங்க ஒரு பெரிய சிறையில் இருக்கீங்க, நாங்க ஒரு சின்ன சிறையில் இருக்கோம்.. அவ்வளவுதான்.. அதை மாற்றுவதற்கான போராட்டம் இது" என்று ஆறுதல் படுத்துகிறார்.. எவ்வளவு நெருக்கடியான சமயம் என்றாலும், அங்கு கருணாநிதியின் கலை உணர்வு வெளிப்பட்டுவிடும்" என்றார்.

திராவிடம்

திராவிடம்

நேசன் பேசும்போது, "தமிழ்தேசிய வாதிகளுக்கும் சேர்த்துதான் இந்த விவகாரத்தை பார்க்கிறேன்.. பொதுவாக தமிழ்தேசியவாதிகள் நம்மேல் வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், திராவிடம் என்ற பெயரில் தமிழர்களை மழுங்கடிப்பது மாதிரியான பேச்சுக்களை கொண்டு போவார்கள்.. ஆனால், கல்லக்குடியில் அன்னைக்கு போட்ட விதைதான். இன்றுவரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.. இப்போதுவரை தமிழ் மொழியை நம்மிடம் இருந்து அந்நியப்படுத்தி வைக்க முயற்சி நடக்கிறது.. இப்போதுவரை அதை தடுத்து கொண்டிருந்தாலும், இதற்கு மூல காரணம் கல்லக்குடி போராட்டம்தான்.

அண்ணாதுரை

அண்ணாதுரை

டாக்டர் சாய் லக்ஷ்மிகாந்த் பேசும்போது, அந்த காலகட்ட தலைவர்களில் நிறைய பேர் படித்தவர்கள்.. பட்டம் வாங்கியவர்கள்.. கருணாநிதி மட்டும்தான் படிக்கவில்லை.. புகழ், செல்வாக்கு, திறமை என அத்தனை இருந்தும், டிகிரி மட்டும் இல்லை.. அதனால் தன்னால் கட்சிக்கு எந்த வகையிலும் இழுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே எத்தனையோ விதமான முயற்சிகளை கலைஞர் மேற்கொண்டார்.

தனித்தமிழ்

தனித்தமிழ்

டாக்டர் சஃபி பேசும்போது, இன்னைக்கு தமிழ் பற்றியும், தனித்தமிழ்நாடு பற்றியும் யார் வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால், ஒரு ஊருக்கான பெயர் உரிமையை பெற போராட்டம் நடத்தியவர் கருணாநிதி.. திருக்குறளுக்கு தனி உரையே எழுதியது நமக்கெல்லாம் பெருமை.. கலைஞர் பற்றி ஏதாவது யாருக்காவது தெரிந்து கொள்ள வேண்டுமானால், உங்களுக்கு நல்லா தெரிந்த ஏதாவது 5 திருக்குறளுக்கு கலைஞர் தந்த விளக்கத்தை மட்டும் படிச்சு பாருங்க" என்றார்.

தோழர் கார்த்திக்

தோழர் கார்த்திக்

தோழர் கார்த்திக் பேசும்போது, என் ஊரில் நீ வந்து எப்படி பேர் வைக்கலாம் என்ற ஆதங்கம்தான் இந்த போராட்டத்துக்கு முக்கிய காரணம்.. 6 மாத சிறை தண்டனை முடிந்து வந்த கருணாநிதியிடம், ஒருவேளை அந்தரயில் உங்கள் கழுத்தில் ஏறியிருந்தால் என்னவாகி இருக்கும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.. அப்படி ஏறியிருந்தால், என் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை எடுத்து கல்லக்குடி என்று எழுதியிருப்பார்கள்" என்று பதிலளித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என்றார்.

வழக்கறிஞர் வைரமுத்து

வழக்கறிஞர் வைரமுத்து

தொடர்ந்து வழக்கறிஞர் வைரமுத்து பேசும்போது, கல்லக்குடி என்று பேப்பரில் எழுதி அங்கு ஒட்ட வேண்டும் என்பதுதான் போராட்டத்தின் நிலைப்பாடு.. இதில் யார் கைதானாலும், இன்னொரு அணி போகவேண்டும்.. எப்படியும் அந்த பேப்பரை போலீஸ் கிழித்துவிடும்.. அதனால், அணி அணியாக சென்று பேப்பரை ஒட்ட வேண்டும் என்றுதான் முடிவு செய்யப்பட்டிருந்தது.. ஆனால், முக்கிய தலைவர்கள் எல்லாம் ஏற்கனவே கைதாகி விட்டதாலும், இந்த போராட்டத்தை மாநில அளவில் பேசப்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே, தண்டவாளத்தில் படுப்பது என்று கருணாநிதி முடிவெடுத்தார்..

அரசியல் நோக்கம்

அரசியல் நோக்கம்


இப்படி ஒரு பிளானே அன்றைய தின போராட்டத்தில் கிடையாது. இந்த போர்க்குணம்தான் இன்றுவரை திமுகவில் தொடர்கிறது. இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பொதுத்தளத்துக்கு, மீடியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.. அதேபோல, செந்தில்வாசன் பேசும்போது, தோழர் இந்திரகுமார் இந்த போராட்டத்தை இருவர் படம் மோசமாக சித்தரித்திருந்தது.. அரசியல் நோக்கத்திற்காக இதை பயன்படுத்தி கொண்டதை, இங்கு சுட்டிக்காட்டி உடைக்க வேண்டும்" என்று சொல்லி அந்தப் படத்துக்கு தன்னுடைய கண்டனங்களையும் தெரிவித்தார்...

தாக்கம்

தாக்கம்

கோபிநாத் பேசும்போது, இதனால் வந்த பலன் என்ன? என்று பார்க்கிறேன்.. இப்படி ஒரு போராட்டத்துக்கு பிறகு, பெயரை மாற்றி திணிக்க வேண்டும் என்ற நினைப்பே தோன்றாத அளவுக்கு இந்த கல்லக்குடி போராட்டத்தின் தாக்கமும் வீச்சும் ஏற்பட்டது.. இந்த காலகட்டத்தில் திமுக தேர்தல் அரசியலில்கூட ஈடுபடவில்லை.. அதனால் அரசியல் ஆதாயத்துக்காக திமுக இதனை செய்தது என்ற வாதங்கள் எல்லாமே அடிப்படையற்றது. இப்போது இருமொழி கொள்கையோடு தொடர்கிறோம். தமிழ்நாட்டில் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. இதற்கு அடிப்படையாக அந்த போராட்டம் அமைந்துள்ளது.

பாடதிட்டங்கள்

பாடதிட்டங்கள்

ரவி பேசும்போது, இதுபோன்ற திட்டங்களை ஏன் பாடத்திட்டங்களில் கொண்டு வரவில்லை? அந்த காலத்திலேயே இதை பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருக்கலாம்.. கட்சி ஆரம்பித்த 4வது வருஷமே இப்படி ஒரு மாற்றத்தை கருணாநிதி ஏற்படுத்தியது பெரிய விஷயம்.. கட்சிக்கு ஊக்கம் தந்திருக்கிறார்.. அதனாலதான் இப்போ வரைக்கும் பேசிட்டு இருக்கோம்.. இனியாவது பாடத்திட்டத்தில் திமுகவின் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டங்களை கொண்டு வரலாம்.

அண்ணா

அண்ணா

சிவா பேசும்போது, பெரியார் ஆகட்டும், அண்ணா ஆகட்டும், கலைஞர் ஆகட்டும், தாங்கள் எடுத்து கொண்ட போராட்டங்களில் வெற்றி பெறும்படி போராடினார்கள்.. எந்த போராட்டத்தையுமே அடையாள போராட்டமாக செய்யவில்லை.. ஓடிடிகளில் நிறைய படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.. அந்த வகையில் கருணாநிதியின் இந்த போராட்டங்கள் குறித்தும் படங்கள் வெளிவந்தால் நன்றாக இருக்கும்" என்றார்... இறுதியாக மதி பேசும்போது, வடமொழி என்பதால்தான் இப்படி ஒரு போராட்டமே நடந்தது.. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? பிள்ளைகளுக்கு தமிழில்கூட பேர் வைப்பதில்லை.. இனிமேலாவது நாம், நம்முடைய பிள்ளைகளுக்கு தமிழில் பேர் வைக்க முயல்வோம்.." என்றார்.

English summary
Kallakkudi will never forget Karunanidhi for his agitation for Tamil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X