சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜரூர் வேகத்தில் திமுக.. பிக்கப் ஆகாத தேமுதிக.. கவலையில் அதிமுக.. கள்ளக்குறிச்சி நிலவரம்

கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீஷ் மீது அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளார்களாம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா மேடம் இப்படி செய்யலாமா?-தேமுதிக தொண்டர்கள்

    சென்னை: சொல்ல சொல்ல கேட்கல.. தொகுதியை தந்துட்டாங்க.. இப்ப நிலைமை இப்படி ஆகிபோச்சே என்று அதிர்ச்சி ஆகி கிடக்கிறதாம் கள்ளக்குறிச்சி அதிமுக தரப்பு!

    தேமுதிக அதிமுக கூட்டணிக்குள் வருவதற்கு முன்பே கள்ளக்குறிச்சி நிறைய போட்டா போட்டி இருந்தது. எப்படியும் தேமுதிகவுக்கு வலு இல்லை, அப்படியே கூட்டணிக்கு வந்தாலும் தருவதை வாங்கி கொள்ளும் நிலைமையிலதான் உள்ளது என்பதை உணர்ந்த அதிமுக புள்ளிகள் கள்ளக்குறிச்சிக்கு குறி வைத்தார்கள்.

    முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர் மோகன், சிட்டிங் எம்பியாக இருந்த காமராஜ், மாவட்ட செயலாளர் குமரகுரு இவங்க 3 பேருமே கள்ளக்குறிச்சிதான் எங்களுக்கு வேண்டும் என்று தனித்தனியாக தலைமைக்கு அழுத்தம் தந்து கொண்டிருந்தார்கள்.

    பம்பரம் சுழன்று வேறு எங்காவது போய் விடும் போலயே.. சிக்கலில் மதிமுக! பம்பரம் சுழன்று வேறு எங்காவது போய் விடும் போலயே.. சிக்கலில் மதிமுக!

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    ஆனால் கடந்த அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக நுழைந்ததுடன், தொகுதி பங்கீட்டில் பிரச்சனை உருவானது. ஒதுக்கவுள்ள தொகுதிகள் எல்லாமே தோற்கக்கூடியதாக இருக்கிறது, அதனால் கள்ளக்குறிச்சியை மட்டுமாவது எங்கள் விருப்பத்துக்கு தாருங்கள் என்று சுதீஷ் பிடிவாதம் பிடித்தார்.

    அதிருப்தி

    அதிருப்தி

    இதையடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்களது கட்சியை மறந்து, சீட் கேட்டு துளைத்தெடுக்கும் அதிமுக நிர்வாகிகளையும் மறந்து தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சியை ஒதுக்கிவிட்டது. இதனால் கடும் அதிருப்தியானார்கள் கள்ளக்குறிச்சி அதிமுக தரப்பு!

    சுதீஷ் எங்கே?

    சுதீஷ் எங்கே?

    இப்போது விஷயம் என்னவென்றால், 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டும், வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். கள்ளக்குறிச்சிக்கு சுதீஷ்தான் வேட்பாளர். ஆனால், அறிவித்த நாளிலிருந்து இன்றுவரை சுதீஷ் தொகுதி பக்கம் வரவே இல்லையாம். அதேபோல் பூத் செலவுக்கும் பணம் தரவில்லையாம். இதனால் இதனால் அதிமுகவினர் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

    திமுக ஸ்பீடு

    திமுக ஸ்பீடு

    சொல்ல சொல்ல கேட்காமல், தொகுதியை தந்துவிட்டு... இன்னும் சம்பந்தப்பட்டவரை இங்கு காணோமே என்று ஏகப்பட்ட எரிச்சலில் உள்ளனராம். ஆனால் இந்த விஷயத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்ட திமுகவோ களப்பணியில் ஜரூராக இறங்கி விட்டதாம்! வேட்பாளரோ பொன்முடி மகன் என்பதால் தொகுதியில் தேர்தல் வேலைகள் றெக்கை கட்டி பறக்கிறதாம்!

    English summary
    Kallakurichi ADMK is dissatisfied with DMDK Candidate LK Sudhish. The reason for this is that Sudhish has not yet come into Kallakurichi Constitution.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X