சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Kamal Haasan: கையில் கறை படிந்து விடக் கூடாது.. ரொம்ப தெளிவாக இருக்கிறோம்.. கமல் பளிச் பேச்சு

வரும் தேர்தலில் தனித்து போட்டி என கமல்ஹாசன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "எங்கள் கையில் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், லோக் சபா தேர்தலில் தனித்துதான் போட்டி என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தி உள்ளார்.

மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பது சமீப காலமாகவே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்தார். கமலின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் ஆழ்ந்து கவனிக்கப்பட்டது.

எம்பி தேர்தல்

எம்பி தேர்தல்

இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது எம்பி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் பேசியபோது சொன்னதாவது:

அவசரம் ஏன்?

அவசரம் ஏன்?

"நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி விஷயத்தில் அவசரம் காட்டக்கூடாது. மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என ஆலோசித்து வருகிறோம். எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு.

கூட்டணி இல்லை

கூட்டணி இல்லை

மக்களுக்கு நல்லதை பரிமாற முற்படும் போது அவசரமாக கைகுலுக்க வேண்டிய அவசியமே இல்லை. திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை.

கறை படிய கூடாது

கறை படிய கூடாது

அதேபோல, டிடிவி தினகரன் கட்சியுடனும் கூட்டணி இல்லை. ஆனால் எங்கள் கை கறை படிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

English summary
Kamal Hasan Says that Makkal Needhi Maiam contest alone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X