சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா?.. அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா என அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    கமலும் ரஜினியும் இணைந்தால் நல்லதுதான்.. கஸ்தூரி பளிச்

    கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    Kamal Haasan asks how can send soldiers to the war field without any weapons?

    இந்த நோய் மற்ற நாடுகளில் பரவத் தொடங்கிய போதிலிருந்தே மாஸ்க் மற்றும் சானிடைஸர்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. தற்போது 190 நாடுகளுக்கும் மேல் நோய் பரவிவிட்டதால் மாஸ்க்களை மருத்துவர்களும், நோயாளிகளும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் பல்வேறு நாடுகளில் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் இல்லாமலேயே மருத்துவர்கள் பணி செய்யும் அவலம் ஏற்பட்டது. தமிழகத்திலும் இது போல் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு மாஸ்க் இல்லை என்றும் கூறப்படுகிறது.

    எனினும் இதை சுகாதாரத் துறை மறுத்துள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும்.

    அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

    English summary
    MNM President Kamal Haasan asks how can send soldiers to the war field without any weapons?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X