சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்ம தம்பி, நான் கூப்பிடறேன்... அழைக்கிறார் உலக நாயகன்.. "அவர்" வருவாரா??

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் பதவிக்கு என்னைவிட தகுதியானவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கமல்ஹாசன் சவால் விடுத்துள்ளார்.

தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இதோ...

Kamal Haasan challenges No one is there to take CM post

கே: அதிமுக, திமுகவை வெல்லும் அளவுக்கு மக்கள் நீதி மய்யம் வளர்ந்து விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா

ப: வளர்ந்துவிடும்.

கே: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும், போட்டியிடாது?

ப: போட்டியிட்டே ஆக வேண்டும்

கே.: மக்கள் நீதி மய்யம் சந்திக்கிற முதல் தேர்தல், திமுகவுடன் கூட்டணியில்லை என கமல் சொல்வாரா?

ப: சொல்லிட்டா போச்சு

[ம.நீ.ம.வின் எதிர்காலத்தை கணித்த அமைச்சர்கள்.. மரத்தடி ஜோசியர்களாகும் காலம் விரைவில்- கமல் நக்கல்]

கே: சர்கார் பட விழாவில் முதல்வர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று விஜய் பேசியது குறித்து

ப: நம்ம தம்பி நான் கூப்பிடறேன்... வரேன் என்று சொன்னால் இடம் உண்டு.

கே: இப்ப இருக்கும் அரசியல் கட்சிகள் செய்துவிட முடியாத எந்த விஷயத்தை நீங்கள் செய்து விட முடியும் என நினைக்கிறீர்கள்?

ப: நேர்மை, மார்தட்டி சொல்வேன்.

கே: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து

ப: ஐயப்பனின் தந்தை பரமசிவன் பாதி பெண். அவரது தாய் மோகினி முழு பெண். எனவே ஐயப்பனின் டிஎன்ஏவில் 75 சதவீதம் பெண் இருக்கிறது. அவர் பெண்களை மதியாமல் இருக்கவே மாட்டார் என்பது எனது நம்பிக்கை. தற்போது இரு பால் ரசிகர்களும் அவருக்கு உள்ளனர் என எடுத்துக் கொள்வோம்.

கே: வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் குறித்து

ப: வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

கே: நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் தான் அவரை பார்த்ததே இல்லை என அறிக்கை விட்டது குறித்து உங்கள் கருத்து

ப: நிர்மலா தேவி என்ன சொன்னார் என்பதை மக்கள் முன் வைக்கலாமே!

கே: காங்கிரஸுடன் கூட்டணி வைப்பீர்களா

ப: பேசி பார்ப்போம்

கே: திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்கிறாரா கமல்

ப: இப்ப அதற்கான தேவையில்லை. மெதுவாக உடையட்டும்

English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan says that no one is eligible for taking CM post except myself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X