சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கெஜ்ரிவால் அப்படி பேசி இருந்தால்.. அது தவறுதான்.. கமல்ஹாசன் கருத்து!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக மாணவர்களுக்கு எதிராகவோ இல்லை இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவோ பேசி இருந்தால் அது தவறுதான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal about Kejriwal: கெஜ்ரிவால் அப்படி பேசியிருந்தால் தவறுதான் - கமல்ஹாசன்- வீடியோ

    சென்னை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக மாணவர்களுக்கு எதிராகவோ இல்லை இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவோ பேசி இருந்தால் அது தவறுதான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசி உள்ளார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ கால் ஒன்று தேர்தலை ஒட்டி டெல்லி மக்களுக்கு சென்றது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவால் ஆடியோவில் பேசி இருந்தார். அதில், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் டெல்லி வாசிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

    Kamal Haasan comment on Arvind Kejriwals audio against Tamilnadu Students

    இந்த ஆடியோ பெரிய வைரல் ஆனது. இதற்கு எதிராக பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆம் ஆத்மி கட்சித்தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்.

    முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர். இதையடுத்து கெஜ்ரிவால் பேச்சு குறித்து தற்போது கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

    கமல்ஹாசன் தனது பேட்டியில், மக்கள் ஆதரவு எங்களுக்கு அற்புதமாக இருக்கிறது. மக்களின் இந்த பெரிய ஆதரவு, எங்களுக்கு உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது. பல்வேறு இடைஞ்சல்கள் எங்களுக்கு வந்தது. ஆனால் அதற்கு இடையிலும் மக்கள் பலர் வந்து மக்கள் நீதி மய்யத்திற்கு சாரை சாரையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    மறைந்திருந்த மனிதம்.. கை கொடுத்து காப்பாற்றிய 20 நிமிடம்.. பிரான்சிஸ் கிருபா மீண்டது இப்படித்தான்! மறைந்திருந்த மனிதம்.. கை கொடுத்து காப்பாற்றிய 20 நிமிடம்.. பிரான்சிஸ் கிருபா மீண்டது இப்படித்தான்!

    எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்வது எதோ விளையாட்டு போல இருக்கிறது. இதை அரசியல் விளையாட்டு போலத்தான் நான் பார்க்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதை நாம் ஆராய வேண்டும்.

    டெல்லிக்கு அவர் மாநில அந்தஸ்து கேட்கிறார். அதனுடைய அடிநாதமாக அது இருக்கும். நான் இதை போன் செய்து அவரிடம் நேரடியாக கேட்க முடியும். அவர், தமிழக மாணவர்கள் அங்கு வந்து வாய்ப்பு பெறும் போது, டெல்லி மாணவர்கள் அங்கு வாய்ப்பு பெற முடியாமல் இருப்பது குறித்து பேசி இருப்பார்.

    மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக இப்படி பேசி இருப்பார். தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராக அவர் பேசி இருக்க மாட்டார். அவர் அப்படி பேசி இருந்தால் தவறுதான், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    MNM chief Kamal Haasan comment on Arvind Kejriwal's audio against Tamilnadu Students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X