சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலியல் தொல்லைக்குள்ளானவரின் பெயரை கோவை எஸ்பி வெளியிட்டது தவறு.. கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Pollachi News: பாதிக்கப்பட்டவரின் பெயரை கோவை எஸ்.பி வெளியிட்டது தவறு -கமல்ஹாசன்- வீடியோ

    சென்னை: பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரத்துக்குள்பட்ட பெண்ணின் பெயரை கோவை எஸ்பி பாண்டியராஜன் வெளியிட்டது தவறு என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

    200-க்கும் மேற்பட்ட அப்பாவி பெண்களின் கற்பை 20 பேர் கொண்ட கும்பல் சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சமூகவலைதளங்களில் கொந்தளிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் கைதான 4 பேரை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளை விசாரித்து காலம் தாழ்த்தாமல் அப்படியே சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதும் மக்களின் ஆதங்கமாக உள்ளது.

    கள போராளிகள் முதல் சினிமா பிரபலம் வரை.. கமல்ஹாசன் தேர்வு செய்ய போகும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?கள போராளிகள் முதல் சினிமா பிரபலம் வரை.. கமல்ஹாசன் தேர்வு செய்ய போகும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

    செய்தியாளர்கள் சந்திப்பு

    செய்தியாளர்கள் சந்திப்பு

    இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை டிஜிபி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மனு அளித்துள்ளார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    கடமை

    கடமை

    அப்போது அவர் கூறுகையில் பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதியளித்துள்ளார். தங்கள் கடமையை செய்வோம் என்றும் போலீஸார் உறுதியளித்துள்ளனர்.

    பாலியல் வழக்கு

    பாலியல் வழக்கு

    பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் கோவை எஸ்பி பாண்டியராஜன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பாலியல் பாதிப்புக்குள்ளான பெண்ணின் பெயரை சொல்லிவிட்டார். இது மிகவும் தவறு.

    சட்டத்தை கையில்

    சட்டத்தை கையில்

    எனவே ஊடக நண்பர்களிடம் நான் ஒன்றை கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் படங்களை, பெயர்களை வெளியிட வேண்டாம்.
    சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபமாக பேசலாம். ஆனால் சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. அது வேறு.

    குரல் கொடுக்க வேண்டும்

    குரல் கொடுக்க வேண்டும்

    சட்டத்திற்கு உட்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால்தான் நான் புகார் அளித்து இருக்கிறேன். பொள்ளாச்சி வழக்கில் பதற்றத்தை அதிகரிக்கக் கூடாது. இதில் குரல் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை.

    நடவடிக்கை இல்லை

    நடவடிக்கை இல்லை

    பாலியல் புகாருக்குள்ளான பெண் எஸ்பியின் புகாரின் பேரில் ஐஜி முருகன் மீது நடவடிக்கை எடுக்காதது தவறு. தேர்தல் பரப்புரை குறித்து பேசவும் டிஜிபி அலுவலகத்துக்கு வந்தோம் என்றார் கமல்ஹாசன்.

    English summary
    Makkal Needhi Maiam party's president Kamal Haasan says that Coimbatore SP would not have named the victim in this Pollachi sexual rape incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X