சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாஸ்மாக் திறப்பு: இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.. கொதித்த கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக டுவிட்டரில் கமல்ஹாசன் ஆவேசமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    ஒரு பக்கம் கொரோனா.. மறுபக்கம் டாஸ்மாக்.. இது இப்போ அவசியமா?

    சுமார் 41 நாட்களுக்கு பிறகு கடந்த 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்ட போது சமூக விலகல் பின்பற்றப்படவில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் உள்பட பலரும் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து 8ம் தேதி மாலை மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடுசெய்தது.

    kamal haasan condemns tasmac shops reopen from tomorrow

    இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது. இதனால் மதுக்கடைகள் நாளை முதல் சிவப்பு மண்டலம் அல்லாத பகுதிகளில் திறக்கப்பட உள்ளது.

    இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில்."உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.

    அதிர்ச்சி.. எதை பற்றியும், யாரை பற்றியும் கவலையில்லை..ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடிய கோயில் விழாஅதிர்ச்சி.. எதை பற்றியும், யாரை பற்றியும் கவலையில்லை..ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடிய கோயில் விழா

    மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

    English summary
    kamal haasan condemns tasmac shops reopen from tomorrow
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X