சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் - கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கமல் கண்டனம்

மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டர் 785 ரூபாயாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு மீது மாநிலங்கள் விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் கேஸ் விலையில் மாற்றம் இருக்கும். சென்னை: பெட்ரோல் டீசல் விலை கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருகிறது. இதே போல கேஸ் சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: மக்கள் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்… அக்கறையற்ற மத்திய அரசு.. கமல் ட்வீட்!

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது எல்.பி.ஜி சமையைல் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.

    Kamal Haasan condemns the price hike

    கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டரின் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டர் 785 ரூபாயாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு மீது மாநிலங்கள் விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் கேஸ் விலையில் மாற்றம் இருக்கும்.

    கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என்றும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Petrol and diesel prices have been rising for the past one week. Similarly, the price of a gas cylinder has gone up for the second time in the same month. Actor Kamal Haasan has condemned the price hike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X