சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்.. கமல் அதிரடி பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் - கமல்

    சென்னை: மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசன் கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி கமல்ஹாசன் திருநெல்வேலியில் இன்று மாலை 6 மணிக்கு பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நெல்லை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    ஒத்த கருத்துடையவர்கள்

    ஒத்த கருத்துடையவர்கள்

    அவர் கூறுகையில் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். பிற வேட்பாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. ஒத்த கருத்துடையவர்கள் மட்டுமே எங்களுடன் கூட்டணி அமைக்க முடியும்.

    கூட்டணி

    கூட்டணி

    தமிழகத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் நிறைய உள்ளன. தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்களுடன் கூட்டணி அமைக்கலாம். வேறு எந்தத் தொழிலிலும் வாரிசு வந்தால் தவறு கிடையாது. ஆனால் அரசியலில் அப்படி இல்லை என்றார் கமல்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிவித்திருந்தார் கமல். இந்நிலையில் திடீரென தனித்து போட்டியிடுவேன் என அறிவித்தார்.

    விமர்சனம்

    விமர்சனம்

    இந்த நிலையில் திமுகவின் ஊழல் பொதிகளை சுமக்க நான் தயாராக இல்லை என தெரிவித்திருந்தார். மேலும் தன்னை பார்த்து கிராம சபை கூட்டங்களை காப்பியடிக்கும் திமுகவுக்கு வெட்கம் இல்லையா என கேட்டார். மேலும் தனது கட்சியின் முதலாம் ஆண்டு விழாவில் பேசிய அவர் தமிழகத்துக்கு குடும்ப அரசியலை கற்றுக் கொடுத்தது திருவாரூர் என கருணாநிதியை நேரடியாக விமர்சனம் செய்தார் கமல்.

    English summary
    Kamal Haasan says that he will contest in Lok sabha election 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X