சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபனி புயல்: சுயமரியாதை இருந்தால் ஒடிஸாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.. கமல்ஹாசன் கடும் தாக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: ஃபனி புயல் பாதிப்புகளை சிறப்பாக கையாண்ட ஒடிஸாவிடம் இருந்து சுயமரியாதை உள்ள அரசுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

வங்கக் கடலில் ஃபனி புயல் உருவானது. இது தமிழகத்துக்கானது என கணிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஒடிஸா மாநிலத்தில் புரி கடலோர பகுதியில் நேற்று முன் தினம் கரையை கடந்தது.

டெல்லி மாணவர்களின் உரிமையை தமிழர்கள் பறிக்கிறார்கள்.. நான் கன்னடன்.. பிரகாஷ் ராஜ் சர்ச்சை! டெல்லி மாணவர்களின் உரிமையை தமிழர்கள் பறிக்கிறார்கள்.. நான் கன்னடன்.. பிரகாஷ் ராஜ் சர்ச்சை!

ருத்ரதாண்டவம்

ருத்ரதாண்டவம்

அப்போது மணிக்கு 170 முதல் 200 கி.மீ. தூரத்தில் பலமாக காற்று வீசியது. ஒடிஸாவின் புரி மற்றும் புவனேஸ்வரம் ஆகிய இடங்களில் கடும் சேதத்தை சந்தித்தது. 20 ஆண்டுகள் கழித்து உருவான மிக தீவிர புயல் என கூறப்பட்ட இது கணிக்கப்பட்டதை காட்டிலும் ருத்ரதாண்டவம் ஆடி விட்டு சென்றன.

ஐ.நா. பாராட்டு

ஐ.நா. பாராட்டு

இந்த ஃபனி புயலுக்கு ஒடிஸாவில் 12 பேர் இறந்துள்ளனர். இந்த தாக்குதலில் பெரியளவில் உயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது பெரும் பாராட்டை பெற்றுள்ளது. ஐநா.வின் பேரழிவு குறைப்பு முகமையும் இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

சாத்தியம்

சாத்தியம்

அந்த முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், `20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான புயல் ஒடிசாவை தாக்கியபோதும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புயல் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்த மிகவும் துல்லியமான கணிப்பால் இது சாத்தியமாகி இருக்கிறது' என கூறப்பட்டுள்ளது.

கஜா புயல்

கஜா புயல்

இந்நிலையில், ஃபனி புயல் பேசிய கமல்ஹாசன், சுயமரியாதை உள்ள எந்தவொரு அரசும் ஒடிசாவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதே வேளையில், தமிழர்கள் இன்னும் கஜா புயலை நினைவுக்கூர்ந்து வருவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

English summary
MNM President Kamal Haasan asks ADMK Government to learn lesson from Odisha how they cleverly tackled Fani cyclone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X