சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்து கொண்ட பட்ஜெட்- கமல் விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி அரசின் பட்ஜெட்டை விமர்சனம் செய்த கமல்- வீடியோ

    சென்னை: மோடி அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்து கொண்ட பட்ஜெட் என கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. இதில் நடுத்தர மக்கள், விவசாயிகளை குளிர வைக்கும் வகையில் இருக்கிறது.

    இந்த பட்ஜெட் தேர்தலை முன்னிறுத்தி தாக்கல் செய்யப்பட்டது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம் ஆகும். மேலும் நான்கரை ஆண்டுகளாக ஏழைகள் மீது இல்லாத அக்கறை தற்போது எங்கே முளைத்துவிட்டது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து கமல்ஹாசனும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    மானியங்கள்

    இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த இடைக்கால பட்ஜெட் முதல் முறை படிக்கையில், மத்திய தர மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கவர்ச்சிகரமாக இருப்பது போல தோன்றினாலும், அவர்களுக்கு கிடைப்பதாக கூறப்பட்டிருக்கும் மானியங்கள் மிகவும் குறைவானதே.

    சாதாரண வாக்காளர்

    பொருளாதார நிபுணர்கள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் குளறுபடிகளை ஓட்டைகளை மிக எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். தேர்தலின் போது மக்கள் தங்களுக்கு வாக்களிக்க சட்டப்பூர்வமாக பணம் கொடுப்பது போன்று தான் சாதாரண வாக்காளன் இந்த நிதியறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கிறார்.

    பட்ஜெட்

    வேலைவாய்ப்பற்றவர்களுக்கு இவர்கள் அளித்திருக்கும் சலுகை ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால் மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்காமல் பிற கட்சிகளுக்கு வாக்களித்து விட்டார்கள் என்றால் அடுத்து வரும் புதிய அரசு இவர்கள் தாக்கல் செய்திருக்கும் குழப்பம் வாய்ந்த இந்த பட்ஜெட்டினை ஏன் தொடர்வார்கள்?

    அக்கறை

    அரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்துகொண்ட ஒரு பட்ஜெட். மிக முக்கியமாக இந்த மத்திய நிதியறிக்கை தமிழ்நாட்டின் எந்த முக்கிய பிரச்சனைகளை குறித்து எவ்வித அக்கறையினை காட்டவிரும்பவில்லை என்பது தான் உண்மை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Makkal Needhi Maiam President Kamal Haasan says that the interim budget was passed by Centre for their interest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X