சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எலெக்ஷன் நேரத்தில் உங்கள் காலை பிடித்து கட்டு போடும் மந்திரியெல்லாம் இருக்கிறார்கள்.. கமல் தாக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Haasan campaign: அதிமுக-வை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்-Oneindia Tamil

    சென்னை: தேர்தல் நேரத்தில் உங்கள் காலை பிடித்து கட்டு போடும் மந்திரியெல்லாம் இருக்கிறார்கள் என கமல்ஹாசன் கடும் விமர்சனம் செய்தார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் காசிமேடு பகுதியில் வேட்பாளர் மவுரியாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் என் இளைய காலத்து நண்பர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். இது துறைமுகத்துக்கு அருகில் என்பதாலோ என்னவோ மாசு அதிகரித்து வாழ முடியாத நிலை உள்ளது.

    பாதுகாக்க வேண்டியது

    பாதுகாக்க வேண்டியது

    இதை விட அழகான இடங்கள் சென்னையில் இருக்கலாம். ஆனால் சென்னையின் உயிர் இங்கே இருப்பதாக நான் கருதுகிறேன். உழைப்பாளர்கள் வாழும் இடம் இது. இதை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை.

    உழைக்க வந்தவர்

    உழைக்க வந்தவர்

    அதை செய்ய வந்திருக்கிறோம். இதுக்கு முன்னாடி வந்தவர்களும் இதையேதானே சொன்னார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் அளவு கோபத்துடன் அவர்கள் சொல்லவில்லை. எங்கள் கனவு வேறு அவர்களுடைய கனவு வேறு. போலீஸ் அதிகாரியாக இருந்த மவுரியா உழைத்து, களைத்து ஓய்வெடுக்க வேண்டிய நேரத்திலும் உங்களுக்காக உழைக்க வந்துள்ளார்.

    தேர்வு

    தேர்வு

    இந்த பகுதி அவருக்கு தெரிந்த பகுதி.முகம் பார்த்து அடையாளம் கண்டுகொள்ள கூடியவர். என் மக்களை, என் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோபத்துடன் ஆதங்கத்துடன் இவர் இங்கே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஆட்களைத்தான் நாங்கள் தேர்வு செய்துள்ளோம்.

    தேர்தல் வரும் நேரத்தில்

    தேர்தல் வரும் நேரத்தில்

    தேர்தல் வரும் நேரத்தில் உங்கள் காலை பிடித்து கட்டு போடும் மந்திரியெல்லாம் இருக்கிறார்கள். இவர் தொகுதிக்கு வரவில்லை என நீங்கள் சொன்னால் உடனே ஆவணசெய்யப்படும். வராமல் இருக்கமாட்டார். வேலைக்கு சளைக்க கூடியவர் அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் வேலை செய்யாவிட்டால் அவர்களை ராஜினாமா செய்ய வைக்கக் கூடிய கட்சி மக்கள் நீதி மய்யம் என்றார்.

    ஜெயக்குமாரை விளாசிய கமல்

    ஜெயக்குமாரை விளாசிய கமல்

    மத்திய சென்னையில் பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு பாட்டியின் கால் மீது ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்துவிட்டது. உடனே பதறியடித்த ஜெயக்குமார் தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை பாட்டியின் காலில் கட்டாக கட்டி மருத்துவமனைக்கு அழைத்து செய்யுமாறு கூறியிருந்தார். இந்த சம்பவத்தைதான் கமல் விமர்சனம் செய்துள்ளார்.

    பாட்டியின் கால் மீது விழுந்த ஸ்பீக்கர்.. பதறியடித்து ஓடி வந்த ஜெயக்குமார்.. கர்சீப் வைத்து கட்டினார் பாட்டியின் கால் மீது விழுந்த ஸ்பீக்கர்.. பதறியடித்து ஓடி வந்த ஜெயக்குமார்.. கர்சீப் வைத்து கட்டினார்

    English summary
    Makkal Needhi Maiam president Kamal haasan criticises Minister Jayakumar for helping old lady during election campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X