சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூட்டணி வதந்தி எதிரொலி.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. அகில இந்திய கட்சித் தலைவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமல்ஹாசன், மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்ள போவதாக ஏற்கனவே ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

 பங்கேற்கவில்லை

பங்கேற்கவில்லை

இந்த நிலையில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நடக்கும் சிலை திறப்பு விழாவில் கமல் கலந்து கொள்ளவில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கூட்டணி குறித்து அறிவிப்பு

கூட்டணி குறித்து அறிவிப்பு

நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியானது. இன்று நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் கமல்ஹாசன் கூட்டணி குறித்து அறிவிப்பார். அதன்பின் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

 கமல் மறுப்பு

கமல் மறுப்பு

ஆனால் இந்த செய்தியை நேற்று இரவே கமல்ஹாசன் மறுத்திருந்திருந்தார். அவர் இதுகுறித்து செய்திருந்த டிவிட்டில், ''மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். #நாளைநமதே.'' என்று கூறி கூட்டணி செய்திகளை மறுத்து இருந்தார்.

 விழாவில் கலந்து கொள்ளவில்லை

விழாவில் கலந்து கொள்ளவில்லை

இந்தநிலையில் கருணாநிதி சிலை திறப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்ய கட்சி விழா சார்பாக மதுரை செல்வதாகவும், அதனால் திமுக விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
Kamal Haasan decides not to participate in DMK's Karunanidhi's statue opening ceremony after alliance rumor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X