சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உழைக்கும் இடத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை - கமல்ஹாசன் டுவிட்...பொங்கியெழுந்த நெட்டிசன்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் இன்று அனுசரிக்கப்டுகிறது. இதனையொட்டி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன், உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலை உத்தரவாதம் வரைக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது என்று தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு ஆதரவு கருத்துக்களையும், எதிர் கருத்துகளையும் கூறி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 5 அல்லது 6 தொகுதிகள்.. இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது திமுக கூட்டணியில் விசிகவுக்கு 5 அல்லது 6 தொகுதிகள்.. இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

முதலில் உங்கள் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுங்கள். அதன்பிறகு பாதுகாப்பு பற்றி பேசுங்கள்" என ஒரு தரப்பில் இருந்து இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்தை வைத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் இன்று அனுசரிக்கப்டுகிறது. தொழிலாளர்கள் பணியிடங்களில் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

கமல்ஹாசன் டுவிட்

கமல்ஹாசன் டுவிட்

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இன்று தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்.போராடிப் பெற்ற உலகளாவிய உரிமையான 8 மணி நேர வேலை என்பது இந்தியாவில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

பாதுகாப்பற்ற நிலை

பாதுகாப்பற்ற நிலை

உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலை உத்தரவாதம் வரைக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலை தொடரலாகாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு ஆதரவு கருத்துக்களையும், எதிர் கருத்துகளையும் கூறி வருகின்றனர். கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தை சுட்டிக்காட்டியுள்ள நெட்டின்சன்கள் பலர் அது தொடர்பாக கருத்து கூறியுள்ளனர்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

''முதலில் உங்கள் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுங்கள். அதன்பிறகு பாதுகாப்பு பற்றி பேசுங்கள்" என ஒரு தரப்பில் இருந்து கருத்து வருகின்றன. ''கமல் சார் உங்களை நம்பிதான் இருக்கிறோம். நீங்கள் வந்துதான் உரிமைகளை மீட்டுத் தர வேண்டும்'' என்று ஒரு தரப்பிலும் கமலுக்கு ஆதரவு கருத்துக்கள் வந்து குவிகின்றன.

English summary
National Workers' Safety Day is observed today. Commenting on this, Kamal Haasan said on Twitter that the insecurity situation starts at the workplace and continues until the job is guaranteed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X