சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முப்பாட்டன்களின் சரித்திரம் மகாபாரதம்".. இந்துமத ஓட்டுக்களை பெற கமல் முயற்சியா? வெடித்த பிரச்சனை

கமலை விமர்சித்து பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: "முப்பாட்டன்களின் சரித்திரம் மகாபாரதமா? யாருக்கு யாரு முப்பாட்டன்? எது சரித்திரம்? பேசறதுல ஒரு நியாயம் வேணாமா? முழு பாஜக ஆதரவாளரை போல கமல் பேசுறது சரியா? எல்லாம் வாக்குகளை பெறுவதற்காகத்தான், இப்படி மகாதாபாரத பேச்சை பிக்பாஸ் வீட்டில் கமல் எடுக்கிறார்" என்ற பேச்சு முன்வைக்கப்பட்டு வருகிறது.

நேற்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் 2 முக்கிய கேள்விகள் கேட்டனர்.. ஒன்று, முதல்வர் வேட்பாளரை டெல்லியிலுள்ள பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் சொல்லி உள்ளாரே என்று கேட்டனர்.

அதற்கு அமைச்சர், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு மட்டும் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை, கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றார். அதாவது, முருகனுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், பாஜகவும் அதிமுகவில்தான் அடங்கும், அதிமுகவின் முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் என்பதே ஜெயக்குமாரின் பாயிண்ட்!

 பீகார் சட்டசபை தேர்தல் 2020: பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்பு சிறப்பம்சங்கள் என்னென்ன பீகார் சட்டசபை தேர்தல் 2020: பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்பு சிறப்பம்சங்கள் என்னென்ன

சரித்திரம்

சரித்திரம்

அடுத்ததாக, "மகாபாரதம் முப்பாட்டன்களின் சரித்திரம்" என கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கமல் திடீரென நாத்திகவாதி என்பார், திடீரென ஆத்திகவாதி என்பார்.. அவேர் சொல்வது யாருக்குமே புரியாது.. பிக்பாஸ் போனதால், என்ன வேண்டுமானாலும் சொல்வார்.. தேர்தல் காலம் என்பதால் ஒருகுறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளை பெறுவதற்காககூட சொல்லலாம்.. அதுதான் அவருடைய நிலை" என்றார் அமைச்சர்!

 பகுத்தறிவாளர்

பகுத்தறிவாளர்

இதுகுறித்து சில மய்ய உறுப்பினர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "அவர் தன்னை நாத்திகர் என்று அழைப்பதை ஏற்கவில்லை.. ஆனால் பகுத்தறிவாளர்.. பிறந்த குலத்தில் இருந்து விலகி வந்தவர்.. எப்படி இருக்கிறாரோ அ.ப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் அவர் கருத்து.. இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவர் நோக்கமில்லை.. அவர் இந்துமத விரோதியும் இல்லை.. பிராமணர்களும் ஏற்க வேண்டும், அல்லாதவர்களும் ஏற்க வேண்டும்.. இதுதான் அவர் எண்ணம்.

பிரச்சனை

பிரச்சனை

இன்றைக்கு மத ஆதரவாளர் போல சித்தரிக்க முயல்கிறார்களே, 3 வருஷத்துக்கு முன்பு இப்படித்தான் ஒரு மகாபாரத பிரச்சனையை கொண்டு வந்தார்கள்.. "பெண்களை வைத்து சூதாடுவதை சொல்லும் மகாபாரதத்தை இன்றளவும் நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம்" என்று ஒரு கருத்தை அப்போது சொன்னார்.. அதில் என்ன தவறு? கதையில் உள்ளதைதானே அவர் சொன்னார்?

 மத ஓட்டுக்கள்

மத ஓட்டுக்கள்

அதற்கே மகாபாரதத்தை இழிவுபடுத்திவிட்டார், இந்துக்களின் உணர்வை புண்படுத்திவிட்டார் என்று போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் போனார்களே? இன்று மட்டும் எப்படி இந்து மத ஓட்டுக்களை வாங்க கமல் முயற்சி செய்வார்? தேர்தல் சமயத்தில் எதையாவது சொல்லி, கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்பதன் முயற்சிதான் இதெல்லாம்: என்றனர்.

 நவீன காலகட்டம்

நவீன காலகட்டம்

கமல் பேசிய இந்த பேச்சு குறித்து சில நடுநிலையாளர்கள் நம்மிடம் சொல்லும்போது, "பல கோடி பேர் பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் புத்தக வாசிப்பின் அவசியம் பற்றி கமல் சொல்வது நல்லாதான் இருக்கு.. ஆனால், வெண்முரசு மகாபாரதத்தை தழுவி நவீன காலகட்டத்துக்கு ஏற்ப எழுதப்பட்ட ஒரு நாவலை, "மகாபாரதம் நம்ம முப்பாட்டனின் சரித்திரம்... ஒவ்வொருத்தரும் படிக்கணும்"ன்னு சொல்றதுதான் எங்கோ இடிக்கிற மாதிரி இருக்கு.

 முப்பாட்டன்

முப்பாட்டன்

யாருக்கு யாரு முப்பாட்டன்? எது சரித்திரம்? பேசறதுல ஒரு நியாயம் வேணாமா? முழு பாஜக ஆதரவாளரை போலவே கமல் பேசுவதுதான் இப்போது பேசுபொருளாகி உள்ளது.. இது முழுக்க முழுக்க இந்து மத ஆதரவாளர்களின் ஓட்டுக்களை பெறும் உக்திதான்" என்றனர்.

English summary
Jayakumar says, Kamal is fighting to get the votes of certain religions through the bigg boss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X