சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் போட்டி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார். இவரது கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Kamal haasan is going to contest in Loksabha elections?

இந்த நிலையில் இன்றைய தினம் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என கமல் அறிவித்தது முதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

AIADMK vs AMMK: அஇஅதிமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள் AIADMK vs AMMK: அஇஅதிமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

இதையடுத்து இன்று தனியார் ஹோட்டலில் அவர் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். முதற்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்தார்.

அதில் கமல்ஹாசனின் பெயர் இல்லை. இதையடுத்து அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் 24-ஆம் தேதி வெளியாகும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். அப்போது அவரிடம் நீங்கள் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார். இதனால் கமல் நிச்சயம் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.

English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan says that he will announce on March 24th whether he is going to contest in election or not?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X