சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேற்று வந்த இந்த "சின்னப் பையனிடமிருந்து" இதை கட்சிகள் காப்பியடிக்கலாமே... தவறில்லையே!

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Haasan Speech: வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்-வீடியோ

    சென்னை: ஒரு கவுன்சிலராவது ஆகிவிட வேண்டும். ஆன வேகத்தில் "அள்ளி" விட வேண்டும் என்பதுதான் இப்போதெல்லாம் பெரும்பாலான அரசியல்வாதிகளின் மன தாகமாக இருக்கிறது. அதற்காக பணத்தை வாரி இறைக்க தயாராகவும் இருக்கின்றனர். போட்டதை விட டபுள் மடங்கு லாபம் கொடுக்கும் "தொழில்" அரசியல் என்றாகி விட்டது.

    நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு , இரு சீட்டுகளுக்காக தங்கள் கொள்கைகளை அடகு வைக்கும் கட்சிகளும் உள்ளன. ஒரு தலைவன் என்றால் நல்ல வழிகாட்டியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் பதவி, பணம் என அலைபவராக இருக்கக் கூடாது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் கமல்ஹாசன்தான்.

    நம்ம கட்சி, நம்ம இஷ்டம், நம்ம தொகுதி என்று அவருக்கு அவரே எதையும் நிர்ணயித்துக் கொள்ளாமல் கூட்டு முடிவுகள், கூட்டு ஆலோசனைகள் என்று வித்தியாசமான அரசியலை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார் மக்களுக்கு. அதில் ஒன்றாகவே முதல் தேர்தலிலேயே தான் போட்டியிடுவதில்லை என்று அவர் எடுத்த முடிவு உள்ளது.

    கார்த்தி சிதம்பரம் வேட்பாளரா..ப.சி. குடும்பத்தின் மீது மக்களுக்கே வெறுப்பு.. சுதர்சன நாச்சியப்பன்கார்த்தி சிதம்பரம் வேட்பாளரா..ப.சி. குடும்பத்தின் மீது மக்களுக்கே வெறுப்பு.. சுதர்சன நாச்சியப்பன்

     எந்த தொகுதி

    எந்த தொகுதி

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் நேற்றைய தினம் 2-ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதால் பரபரப்பு இருந்தது. அதில் கமல் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

     கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    இந்த நிலையில் கோவையில் பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் மீதமுள்ள 19 தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். கடைசியாக இதில் கமல்ஹாசன் பெயர் இருக்காது.

     வாரிசு அரசியல்

    வாரிசு அரசியல்

    பல்லக்கில் ஏறி உட்காருவதை விட அதை சுமப்பதே எனக்கு பெருமை என கூறி மற்றவர்களுக்கு வழி விட்டார். வாரிசு அரசியலை நியாயப்படுத்தி வரும் சில அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பிறருக்கு வழிவிட்ட இவரது பாலிசி அனைவரையும் கவர்ந்துள்ளது.

     அரசியல் கட்சி

    அரசியல் கட்சி

    சில பாரம்பரிய கட்சிகளை எடுத்துக் கொண்டோமேயானால் தந்தை,, மகன், பேரன் என குத்தகைக்கு எடுத்தது போல் தொடர்ந்து கொண்டே இருப்பர். ஒரு தேர்தலில் நின்றவர்களே அடுத்தடுத்து நிற்க வாய்ப்பு கொடுப்பது, தான் ஓரங்கட்டப்பட்டுவிட்டால் இருக்கும் போதே செல்வாக்கை பயன்படுத்தி மகனை வளர்த்து விடுவது இதுதான் அரசியல் கட்சிகள் இன்று செய்து கொண்டிருக்கின்றன.

     பின்பற்றக் கூடாது

    பின்பற்றக் கூடாது

    மற்ற கட்சிகளில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் யாரும் அடிமட்ட தொண்டர்களே இல்லை. அதற்காக அவர்கள் உழைக்கவே இல்லை என்று நாம் சொல்ல முடியாது. ஏதோ இரு முறை எம்எல்ஏ, இரு முறை எம்பியாக இருந்தார்களா அதோடு போதும் என அடுத்தவர்களுக்கு வழிவிடுவதுதான் நல்ல பொறுப்பாளர்களுக்கு அழகு. நேற்று வந்த சின்னப்பையன் (கமல் பாணியில்) செய்கிறார், இதை ஏன் மற்ற கட்சிகள் பின்பற்றக் கூடாது?

    English summary
    Kamal Haasan announces that he is not contesting in upcoming elections as he wants to create space for others.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X