சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவார் என்று, பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இணைந்து, எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரபல நடிகர் எஸ்.வி.சேகர். ஆனால், மனக்கசப்பு காரணமாக, அதிமுகவைவிட்டு விலகி, பாஜகவில் இணைந்தார்.

ஆனால், சமீபகாலமாக பாஜகவிலும், எஸ்.வி.சேகருக்கு பல்வேறு மனக்கசப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

வேட்பாளரை அறிவிச்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாயிருச்சு.. வேறெங்க.. நம்ம அதிமுகவில்தான்! வேட்பாளரை அறிவிச்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாயிருச்சு.. வேறெங்க.. நம்ம அதிமுகவில்தான்!

மோதல்கள்

மோதல்கள்

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் சில மாதங்கள் முன்பாக கூறிய கருத்து அவருக்கு எதிராக பெரும் பிரம்மாஸ்திரமாக விஸ்வரூபம் எடுத்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு, பாஜக அலுவலகத்திற்குள் எஸ்.வி.சேகரை, பாஜக தலைவர் தமிழிசை, அனுமதிப்பதில்லை என்று கூறப்பட்டது. இதனால் எஸ்.வி.சேகர் அதிருப்தியில் உள்ளார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலிலும், பாஜக சார்பில் எஸ்.வி.சேகர் எங்குமே பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. அவரை பிரச்சாரத்திற்கு பாஜக தலைவர்கள் அழைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான், எஸ்.வி.சேகர் இப்போது ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

கமல்ஹாசன் சிரிப்பு

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுடன் சிரித்தபடி அமர்ந்துள்ள படத்தை, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள, எஸ்.வி.சேகர், "என் கணிப்பு சரியாக இருந்தால் கமல் மே 23 ல் 6% க்கு மேல் ஓட்டுக்கள் பெற்று வரும் சட்ட மன்றத்தேர்தலில் தவிற்க முடியாத ஒரு முக்கிய இடம் பிடிப்பார். Start 🎵🎵🎵🎵🎵🎵" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

எஸ்.வி.சேகரின் இந்த ட்வீட்டை வைத்து பார்க்கும்போது, பாஜக மீதான அதிருப்தியை இப்படி அவர் வெளிக்காட்டியுள்ளாரா, அல்லது, லோக்சபா தேர்தலில் மிடில் கிளாஸ் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் வாக்குகள், கமல்ஹாசன் கட்சிக்கு பெருமளவிற்கு சென்றதாக வெளியான தகவல்கள் அடிப்படையில், இவ்வாறு கூறியுள்ளாரா என்பது தெரியவில்லை. ஆனால், இன்னமும், தனது ட்விட்டர் ஹேண்டில் பெயரில் சவுக்கிதார் என்ற அடைமொழியை அப்படியேத்தான் வைத்துள்ளார் எஸ்.வி.சேகர் என்பது பாஜகவினருக்கு சற்று ஆறுதலான செய்தி.

English summary
BJP leader S.VE.Shekher says, Kamal Haasan party will get 6% of vote share in the upcoming loksabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X