சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி.. லோக் சபா தேர்தலுக்கு கமல் அதிரடி திட்டம்!

ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்ற தேர்தலுக்கு கமல்ஹாசன் அதிரடி திட்டம்- வீடியோ

    சென்னை: ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும். யார் யாருடன் ஆலோசனை நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

    Kamal Haasan plans for New alliance for Lok Sabha Election

    தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாமல் மக்கள் நீதி மய்யம் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது . அதிமுக, திமுக இல்லாமல் முக்கியமான கட்சியாக மக்கள் நீதி மய்யம் உருவெடுத்துள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பேட்டியளித்தார்.

    அதில், தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். லோக் சபா தேர்தலின் போது சூழ்நிலையை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிப்போம்.

    ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசுவோம்.

    தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும்.

    டெல்லியை நீக்கிவிட்டு அரசியல் செய்ய முடியாது. தமிழக அரசியலில் டெல்லியும் முக்கியம். நான் இந்தியன் ஆனால் முதலில் தமிழன். மக்களுக்கு இலவசம் கொடுப்பதில் தவறில்லை. இலவசமாக கல்வியை முதலில் கொடுப்போம், மக்களின் பணத்தை மக்களிடம் கொடுப்பதில் தவறில்லை , என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Makkal Needhi Maiam chief Kamal Haasan plans for New alliance for Lok Sabha Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X